வயநாட்டில் ராகுல்: தேர்தல் பொறுப்பாளரானார் தங்கபாலு!

வயநாட்டில் ராகுல்: தேர்தல் பொறுப்பாளரானார் தங்கபாலு!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராகத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலுவை நியமனம் செய்து உள்ளனர். முன்னதாக நாகர்கோவிலில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் பேச்சை தங்கபாலு மொழிபெயர்த்தார். ஆனால் அவர் தவறாக மொழிபெயர்த்ததாக பலரும் விமர்சனம் செய்தனர். இதனையடுத்து தங்கபாலுவின் மொழிபெயர்பை வைத்து பல மீம்ஸ்கள் இன்று வரை உலா வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலம் அமேதி மக்களவை தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறார். அமேதி தொகுதி எம்பியான அவர், அங்கு 4ஆவது முறையாக போட்டியிடுகிறார். இந்நிலையில் ராகுல் தென் இந்தியாவிலும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடவேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முன்வைத்த கோரிக்கையை ராகுல் காந்தி ஏற்றார். இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி கேரள மாநிலத்தின் வயநாடு மக்களவை தொகுதியிலும் போட்டியிடுவார் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும்.

வயநாடு தொகுதியில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள். ஆகையால், பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தங்கை பிரியங்கா காந்தியுடன் நேற்று இரவு கோழிக்கோடு வந்தடைந்தனர்.

இன்று காலை கோழிக்கோட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வயநாடுக்கு வேட்டி, சட்டை அணிந்து வந்த ராகுலுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகம் நோக்கி ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்றார். ஊர்வலத்தில் பிரியங்கா காந்தி மற்றும் உம்மன்சாண்டி, ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். பின்னர், வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகம் சென்றடைந்த ராகுல் காந்தி, மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.அஜய் குமாரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கேரள மாநிலத்திற்கு வந்துள்ள ராகுல் காந்திக்கு கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ராகுலின் வருகையை ஒட்டி கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையேதான் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராகத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்க பாலுவை நியமனம் செய்துள்ளனர். முன்னதாக நாகர்கோவிலில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியின் பேச்சை தங்கபாலு மொழிபெயர்த்தார். ஆனால் அவர் தவறாக மொழிபெயர்த்ததாக பலரும் விமர்சனம் செய்தனர். இதனையடுத்து தங்கபாலுவின் மொழிபெயர்பை வைத்து பல மீம்ஸ்கள் இன்று வரை உலா வருகிறதாக்கும்.

Related Posts

error: Content is protected !!