December 4, 2021

ஜான்சன் & ஜான்சன் சிங்கிள் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி!- மத்திய அமைச்சர் தகவல்!

ந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் என இரண்டு வகையான தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனாவுக்கு எதிராக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தடுப்பூசியை தயாரித்து உள்ளது. இந்தியாவில் தயாரித்த தடுப்பூசிக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க அந்நிறுவனம் மனு செய்த நிலையில் அந்த மனுவை சமீபத்தில் திரும்பப் பெற்றது அமெரிக்காவில் தடுப்பூசி நீதான ஆய்வின் போது சிலருக்கு ரத்தம் குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது ஒருவேளை. தடுப்பூசி செலுத்தி கொள்வதால் பின்விளைவு ஏற்படுமாயின் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் இந்தியாவில் பல சட்ட சிக்கல்கள் இருக்கிறது.இதனால் தடுப்பூசி ஒப்புதல் வழங்க கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் திரும்ப பெற்றது.

இந்த நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தனது ஒற்றை டோஸ் தடுப்பு ஊசி மருந்தை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று மறுபடியும் நேற்று வெள்ளிக்கிழமை அன்று மனு செய்தது அவரது மனு பரிசீலிக்கப்பட்டு வெள்ளிக்கிழமையே ஒப்புதல் வழங்கப்பட்டது. இபோதைக்கு நெருக்கடி கால மருந்தாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒற்றை டோஸ் தடுப்பூசி மருந்தை பயன்படுத்தலாம் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சூர் மாந்தவியா அனுமதி வழங்கியுள்ளார். இந்தத் தகவலை அவரே சனிக்கிழமையன்று பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இப்போது இந்தியாவில் ஐந்து தடுப்பூசி மருந்துகள் பொதுமக்களுக்கு கிடைக்கின்றன என்று மத்திய சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கிடைக்கும் 5 கொரோனா தடுப்பூசி மருந்துகள்:

கோவிஷீல்டு

கோவாக்சின்

ஸ்புட்னிக்- 5

மாடெர்னா

ஜான்சன் அண்ட் ஜான்சன்.