கோவையிலிருந்து ஷீரடிக்கு முதல் தனியார் ரெயில் சேவை!

கோவையிலிருந்து ஷீரடிக்கு முதல் தனியார் ரெயில் சேவை!

‘பாரத் கவுரவ்’ ரயில்கள் திட்டத்தின்கீழ் நாட்டில் முதல் தனியார் ரயில், கோவையிலிருந்து ஷீரடிக்கு நேற்று மாலை இயக்கப்பட்டது.

இந்தியாவில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கவும், பாரம்பரியத்தை பறைசாற்றவும் ‘பாரத் கவுரவ்’ ரயில்கள் என்ற பெயரில் 190 ரயில்கள் இயக்கப்படும் எனவும், இந்த ரயில்கள் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) மட்டுமல்லாது, தனியாராலும் நிர்வகிக்கப்படும். குத்தகை அடிப்படையில் ரயில் சேவைகளை தனியார் மேற்கொள்ளலாம் என ரயில்வே சார்பில் கடந்தாண்டு நவம்பர் மாதம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பாரத் கவுரவ் ரயில்கள் திட்டத்தின்கீழ் நாட்டின் முதல் தனியார் ரயில் கோவையிலிருந்து ஷீரடிக்கு நேற்று மாலை இயக்கப்பட்டது. இது ரயில்வே பணியாளர்களைப் பயன்படுத்தி முற்றிலும் தனியார் சார்பில் இயக்கப்படும் ரயில் சேவை ஆகும். கோவையில் உள்ள வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்கு தனியார் ரயில் தனது பயணத்தைத் தொடங்கியது.

தனியார் ரயில் சேவை குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:–

பாரத் கவுரவ் திட்டத்தின்கீழ் முதல் ரயில் கோவையிலிருந்து ஷீரடிக்கு தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக இப்படியொரு திட்டத்தின் கீழ் இயக்கப்படும் முதல் ரயில் சேவை இது. இன்று மாலை 6 மணிக்கு பயணத்தைத் தொடங்கியுள்ள ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, பெங்களூரு, தர்மாவரம், மந்த்ராலயம், வாடி வழியாக மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய் நகரை சென்றடையும்.

அதே ரயில் மீண்டும் வரும் 18-ம் தேதி பகல் 12 மணிக்கு கோவை வந்தடையும். மந்த்ராலயம் ரயில் நிலையத்தில் மட்டும் இந்த ரயில் 5 மணி நேரம் நிற்கும். மந்த்ராலயத்தில் சுவாமி தரிசனம் செய்ய இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முற்றிலும் சுற்றுலாவுக்கான ரயில் இது. முதல் ரயிலில் 1,100 பேர் பயணம் செய்கின்றனர். மாதம் 3 முறை இந்த ரயில் இயக்கப்பட உள்ளது என்று கூறினர்.

error: Content is protected !!