கடந்த மூன்று நாட்களாக சர்வதேச அளவில் உலகில் மிகப்பெரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் நோபல் விருதில், இந்த ஆண்டு 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் விருதிற்காகப் போட்டியிடுகின்றனர்.
அந்த வகையில், 2020 ஆண்டின் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு, ஹெப்பாட்டட்டீஸ் சி-வைரஸ் கண்டுப்பிடிப்புக்காக ஹார்வே ஜே ஆல்டர், மைக்கேல் ஹாப்டன், சார்லஸ் எம்.ரைஸ் ஆகிய மூவருக்கும், இயற்பியலுக்கான நோபல் பரிசு ரோஜர் பென்ரோஸ், ரெய்ன்ஹார்ட் ஜென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ் ஆகியோருக்கும், வேதியியல் துறையில் நோய் எதிர்ப்பு தொடர்பான மரபணு ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் ஜெனிஃபர் ஏ டவுட்னா மற்றும் பிரான்சை சேர்ந்த இமானுவேல் சார்பென்டியர் ஆகிய 2 பெண்களுக்கும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், 2020ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க பெண் கவிஞர் லூயிஸ் க்ளூக் வென்றுள்ளார். லூயிஸ் க்ளூக் இலக்கியப்பிரிவில் 1993ஆம் ஆண்டிற்கு பிறகு நோபல் பரிசு பெறும் பெண் கவிஞர் ஆவார். கடந்த 1943ம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த அவர், கேம்ப்ரிட்ஜ் நகரில் வசித்து வருகிறார். கவிஞரான இவர், யேல் பல்கலையில் ஆங்கில துறை பேராசிரியராகவும் உள்ளார். இவர் 12 கவிதை தொகுப்புகளையும், கவிதை குறித்து சில கட்டுரை தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.
கோவேக்ஸின், கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசியாக (பூஸ்டர் டோஸ்) கோர்பிவேக்சை செலுத்த மத்திய அரசு ஒப்புதல்…
பால்டிக் கடற்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள 1 லட்சம் டன் ரசாயன ஆயுதங்களால், இயற்கைக்கு பேரழிவு ஏற்படும் என்றும் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
கேரளா மாநிலம் பத்தனம்திட்ட மாவட்டத்தில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். இந்த கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மாலை…
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர் சென்னையில் நடைபெற்றது. இதன் தொடக்கவிழா ஜூலை 28 நடைபெற்ற நிலையில், நிறைவு விழா…
ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் தயாரிப்பில் டீகே இயக்கத்தில் வைபவ், சோனம்பாஜ்வா, கருணாகரன்,ரவிமரியா,ஆத்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் காட்டேரி.…
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வீட்டில் எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தொடர்பாக டிரம்ப் சொன்னது இதோ:…
This website uses cookies.