October 20, 2021

ரஜினி படத்தில் நவாஸுதீன் சித்திக் மற்றும் சிம்ரன்!

நடிகர் ரஜினிகாந்த் காலா படத்திற்கு பின்னர்,இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இன்னும் படத்தின் தலைப்பு முடிவு செய்யப்படவில்லை.சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் நடந்து வந்தது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்று இருந்தார். முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், கடந்த 10-ந் தேதி சென்னை வந்தடைந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் நிலையில், படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் ரஜினியின் நண்பராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மறுத்துள்ளதுடன், ”படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த படத்தில் பகத் பாசில் இணையவுள்ளார் என்பது பொய்யான தகவலாகும். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக பாபி சிம்ஹா மற்றும் அஞ்சலி ஆகியோர் நடிக்கின்றனர்” என்று கூறி இருந்தார்.

மேலும் ரஜினியுடன் நடித்து வருபவர்கள் பட்டியலியை அதிகாரபூர்வமாக அவ்வப்போது தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். தற்போது நவாஸுதீன் சித்திக் மற்றும் சிம்ரன் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

பிளாக் பிரைடே’, ‘பீப்ளி லைவ்’, ‘கஹானி’, `கேங்க்ஸ் ஆஃப் வாசேபூர்’ உள்ளிட்ட படங்களில் நடித்த தேசிய விருது பெற்ற நடிகர் நவாஸுதீன் சித்திக் ரஜினி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதைத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே, காலா படத்தில் பாலிவுட் நடிகர் நானா படேகர் நடித்த நிலையில் இந்தப் படத்தில் நவாசுதீன் சித்திக் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடிகர் ரஜினி ஹாஸ்டல் வார்டனாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க்து!