Exclusive

தென்காசி திமுக மாவட்ட செயலாளர்கள் ரெண்டு பேரு நல்லா கல்லா கட்டுறாய்ங்களாம்!

ளும் இடத்தில் அமரப் போவதாக் சொல்லிக் கொள்ளும் திமுக தனது கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில் கூட சரிவர வேலை செய்வதில்லை அதிலும் இரண்டு திமுக மாவட்ட செயலாளர்கள் படுத்தும் பாடால் வெற்றி வாய்ப்பு மிகக் கடினமாக இருக்கிறதாம். கொஞ்சம் விளக்கமாகச் சொல்வதானால் தென்காசி சட்டமன்ற தொகுதி கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது மிகவும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் தோல்வி அடைந்தார் அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதனுக்குும் காங்கிரஸ் கட்சியின் இப்போதைய வேட்பாளர் பழனி நாடாருக்கும் சீட் வாங்குவதில் பலத்த போட்டி நடைபெற்றது இருப்பினும் காங்கிரஸ் கட்சிக்கு தென்காசி சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த  திமுக மாவட்ட செயலாளர் பழனி நாடார் இந்த முறை தோல்வி அடைய செய்தால்தான் அடுத்தமுறை வருகிற தேர்தலில் திமுக கூட்டணியில் நாம் வேட்பாளராக களமிறங்க முடியும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பழனி நாடார் அவர்களுக்கு சரிவர வேலை செய்வதில்லை அதேபோல கூட்டணி கட்சிகளுக்கு பூத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய பணத்தையும் இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை இதனால் கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் அந்தந்த ஊர்களில் செய்த பணிகளை நிறுத்தி வைத்துள்ளனர். எனவே வேட்பாளர்களுக்கு பின்னடைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது

இதேபோன்று ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பூங்கோதை களத்தில் நிற்கிறார் . இவர் ஏற்கனவே திமுகவில் உள்ள இவருடைய சகோதரர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் ஆகியோருடன் தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது சமீபத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்ற செய்தி பத்திரிகைகளிலும் வந்தது தொடர்ந்து இரண்டு முறை ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் பூங்கோதை வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை உட்கட்சிப் பூசலின் காரணமாக பூங்கோதையை தோற்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் மாவட்ட செயலாளர்கள் சிவ பத்மநாதன் செய்து வருவதாக தகவல்

அத்துடன் தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக முஹம்மது அபூபக்கர் அவர்கள் ஏணி சின்னத்தில் களம் காண்கிறார். இவர் கடந்த முறை இதே தொகுதியில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனாலும் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் முன்னாள் வர்த்தக அணி தலைவர் அய்யா துரை பாண்டியன் அவர்கள் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார் எப்படியாவது கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக திமுக சார்பாக களம் இறங்க வேண்டும் என்பது அவருடைய நோக்கம் ஆனால் இந்த முறை திமுக கூட்டணிக்கு கடையநல்லூர் தொகுதி ஒதுக்கப்படவில்லை இதனால் அதிருப்தி அடைந்த திமுக வர்த்தக அணி தலைவர் அய்யா துரை பாண்டியன் திமுகவில் இருந்து விலகி டிடிவி தினகரனுடன் இணைந்து அமுமுக கட்சியின் கடையநல்லூர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டு உள்ளார். அதை அடுத்து இவர் பணத்தை தாறுமாறாக செலவு செய்து மக்கள் மத்தியில் இடம்பிடித்துள்ளார்

ஆனால் திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர் முஹம்மது அபூபக்கர் அவர்களோ கடந்தமுறை கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு நிறைய பணிகளை செய்வன செய்து முடித்தவர் அவருக்கு கடையநல்லூர் தொகுதியில் நல்ல பெயரும் உள்ளது அவர் இந்த முறை எளிதில் வெற்றி பெற்று விடுவார் என்பது அனைவரும் அறிந்திருந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற இருக்கும் மாவட்ட செயலாளர் செல்லதுரை தனக்கு வேண்டிய அளவு நல்லா கட்டிக் கொள்கிறார் கூட்டணிக் கட்சிகளை கழட்டிவிட்டு விட்டார்.

அதே போன்று கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகள் சிலரே அமமுக வேட்பாளர் அய்யாதுரை பாண்டியனுக்கு மறைமுகமாக ஆதரவும் அளித்து வருகிறார்கள் இதையும் மாவட்ட செயலாளர் கண்டுகொள்வதில்லை அதேபோன்று கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட கூட்டணி கட்சிகளுக்கு பூத் வழங்கவேண்டிய பணம் இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை. மாவட்ட செயலாளர் செல்லத்துரை தேர்தல் முடிந்தவுடன் திமுக நீக்கிவிடும் என்று தெரிந்து கொண்டு அவசரம் அவசரமாக பணத்தை வசூல் செய்து வருகிறார்

வாசுதேவநல்லூரைப் பொருத்தவரை கடந்த முறை எம்எல்ஏவாக இருந்த மனோகரன் அவர்கள் இந்த முறையும் அதிமுக சார்பாகவே களம் இறக்கப்பட்டு உள்ளார் அவர் மீது கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது.  இதே நிலைதான் சங்கரன்கோவில் வேட்பாளர் அமைச்சராக இருந்த ராஜலட்சுமிக்கும்.

ஆக..

தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தவரை ஐந்து தொகுதிகளும் திமுக  வெற்றி பெற வேண்டிய தொகுதிகள் ஆனால் மாவட்ட செயலாளர்களின் அடாவடி போக்கினாலும் பதவி மற்றும் பணத்தாசை நாளும் இத்தொகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றி கேள்விக்குறியாக உள்ளது

aanthai

Recent Posts

“மஞ்சக்குருவி” படத்தின் பாடல் & டிரைலர் வெளியீட்டு விழாத் துளிகள்!

V.R Combines விமலா ராஜநாயகம் தயாரிப்பில், சௌந்தர்யன் இசையில், "மஞ்சக்குருவி" படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.…

15 mins ago

சர்வதேச அளவில் தலைசிறந்த 1000 பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியல்!

சர்வதேச அளவில் தலைசிறந்த 1000 பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில், முதலிடத்தில் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இடம் பிடித்துள்ளது. முதல் 100…

1 hour ago

தாஜ்மகால் மாதிரி தஞ்சை பெரிய கோவிலையும் பார்க்க மக்கள் வரப் போறாங்க- சரத்குமார் நம்பிக்கை!

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம்…

3 hours ago

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு தடை: மத்திய அரசு அதிரடி உத்தரவு

கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சையில் சிக்கி வந்த பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா(பிஎஃப்ஐ) மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5…

12 hours ago

மகளிர் கல்லூரியின் விழாவில் கலந்து கொண்ட துருவ் விக்ரம்!

சென்னையிலுள்ள எம் ஓ பி வைஷ்ணவ மகளிர் கல்லூரில் நடைபெற்ற ‘விஷ் 22’ (Vish 22) எனும் கல்லூரி கலை…

1 day ago

ஈரான்: ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டத்தில் வெளிநாட்டு சதி?

ஹிஜாப்பை முறைப்படி அணியவில்லை என்று கூறி போலீசார் தாக்கியதில் மாஷா என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும்…

1 day ago

This website uses cookies.