Exclusive

கொரோனா, ஓமிக்ரானை தொடர்ந்து வருது டெல்மைக்ரான்!

கொரோனாவின் தாக்கத்திலிருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் டெல்டா உருவாகி அடுத்த அலையை ஏற்படுத்தி, அதிலிருந்து மீள்வதற்குள் ஓமிக்ரான் வந்துள்ளது. இந்த நிலையில் அடுத்து டெல்மைக்ரான் என்ற புதிய வைரஸ் உருவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதற்கு டெல்மைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவி வருவதே காரணம் என்று கூறப்படுகிறது. உருமாறிய டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ்களின் கூட்டுச் சேர்க்கையே டெல்மைக்ரான். இது ஓமிக்ரானை விட அதிதீவிரமாகப் பரவும் தன்மை கொண்டிருக்கிறது.

இது குறித்து மகாராஷ்டிர மாநில கொரோனா சிறப்புக் குழுவைச் சேர்ந்த மருத்துவர் சஷாங்க் ஜோஷி கூறுகையில், டெல்மைக்ரான், டெல்டா மற்றும் ஓமிக்ரானின் கூட்டுச்சேர்க்கையாக உள்ளது. இதன் காரணமாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கொரோனா சுனாமி ஏற்பட்டுள்ளது என்கிறார்.

இதுவரை கொரோனா வைரஸ்களால் ஏற்பட்டு வந்த அலைகளையே உலகம் தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்த நிலையில், டெல்மைக்ரானால் சுனாமி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவது, 2022–ம் ஆண்டின் மீதான சிறுதுளி நம்பிக்கையையும் தவிடுபொடியாக்கியுள்ளது. டெல்டா வகை கொரோனா நாட்டில் பரவலாக பரவியிருந்த நிலையில், தற்போது உலகம் முழுக்க ஒமிக்ரான் அதிகளவில் பரவி வருகிறது.

ஒமிக்ரான் தொற்று முதல்முறையாக தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. இது பல மடங்கு உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸாகவும், இது அதிதீவிரமாக பரவும் தன்மை கொண்டிருப்பதாகவும் அதே வேளையில், டெல்டா வகை கொரோனாவை விடவும், இது குறைந்த பாதிப்பையே ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டது. ஆனால், தற்போது டெல்டா மற்றும் ஒமிக்ரானின் கூட்டுச்சேர்க்கையான டெல்மைக்ரான் இரண்டு வைரஸ்களின் அமைப்பையும் ஒருங்கே பெற்றுள்ளது.

இதையடுத்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்துவதிலும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கூடுதல் தவணைகளை செலுத்தவும் நாடுகள் தீவிரம் காட்ட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதானோம் வலியுறுத்தியுள்ளார்.

aanthai

Recent Posts

சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்த 7 முக்கிய அறிவிப்புகள்!

“உத்திரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பராமரிக்க அரசு சார்பில் ரூபாய் 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என…

2 hours ago

“ 1947 ஆகஸ்ட் 16” திரைப்பட அதிகாரப்பூர்வ டீசர் வெளியானது!

நம்மைப் பெருமைப்படுத்தும் ஒரு காலகட்டத்தின் கதை! ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் ‘1947 ஆகஸ்ட் 16’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டது.…

2 hours ago

பரியுடைமை (Freedom) உடைக்கப்பட்டு இருட்டு அறைக்குள் தள்ளப்பட்ட ஊடகவியலாளரின் மகள் நான்…மெஹனாஸ் கப்பன்!

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த அக்டோபர் மாதம் தலித் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். இது…

3 hours ago

“விதியோடு ஒரு ஒப்பந்தம்”!

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவு இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு…

14 hours ago

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு விடுக்கும் செய்தி!- முழு விபரம்!

நம் நாட்டில் பாலின சமத்துவமின்மை குறைந்து வருகிறது, சமூக அரசியல் செயல்பாடுகளில் அதிகரித்துவரும் பெண்களின் பங்கெடுப்பு தீர்மானிப்பவையாக உள்ளது. நாட்டின்…

15 hours ago

இந்தியர்கள் அனைவருக்கும் உளமார்ந்த “விடுதலைத் திருநாள் நல்வாழ்த்து”.!

பெருவெளியின் பிரம்மாண்டத்தோடு ஒப்பிடுகையில் மனிதன் மிகச்சிறிய வன்தான், ஆனால் அவன்தான் பேரண்டத்தை எதிரொலிக்கிற கண்ணாடி, அழகுற அதனை சித்தரிக்கும் கவிஞன்,…

16 hours ago

This website uses cookies.