October 26, 2021

Telegram செயலியில் வீடியோ அழைப்பு!- வாட்ஸ் அப்-புக்கு ஆப்பு!?

Instant messaging application WhatsAppப்புடன் மோதுவதற்கு டெலிகிராம் புதிய அம்சத்துடன் களம் இறங்கியுள்ளது. புதிய அம்சத்தால் ஈர்க்கப்பட்ட பயனர்கள் Telegram செயலியை வேகமாக பதிவிறக்கத் தொடங்கிவிட்டனர். இதற்கு முன்பு பல மேம்பட்ட மற்றும் பயனுள்ள அம்சங்கள் இருந்தபோதிலும், Telegram செயலியில் வீடியோ அழைப்பு இல்லை என்பது ஒரு குறையாக இருந்தது. இப்போது அந்தக் குறை நிவர்த்தி செய்யப்பட்டு விட்டதால், Telegram பலத்துடன் களத்தில் இறங்கிவிட்டது.

ஆம்.. டெலிகிராம் வீடியோ அழைப்பு அம்சத்தை வெளியிட்டுள்ளது. இந்த புதிய பதிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், microsoft’s app center platform-ல் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். வழக்கமான டெலிகிராம் செயலியுடன் இந்த பயன்பாட்டை பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

டெலிகிராமின் சிறப்பு அம்சங்கள்:

வாட்ஸ்அப்பைப் போலவே, இது ஒரு செய்தியிடல் தளமாகும். 2 லட்சம் பேர் கொண்ட குழுவை இங்கு உருவாக்கலாம் என்பதோடு, பயனர், பொது சேனல்களையும் இங்கு உருவாக்கலாம். வாட்ஸ்அப்பில் பொது சேனல்களைத் தயாரிக்கும் அம்சம் கிடையாது. கோப்பு, புகைப்படம், வீடியோ பகிர்வு ஆகியவற்றிலும் டெலிகிராம் பயனுள்ளதாக இருக்கும்.

டெலிகிராமில் 2 ஜிபி வரை கோப்புகளைப் பகிரலாம். இது தவிர, pass code lock உண்டு. நீங்கள் அனுப்பும் செய்தி ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தானாகவே நீக்கப்படும் வசதி (self-destructing messages) கொண்டது டெலிகிராம். இருப்பினும் இதுபோன்ற அம்சம் இப்போது வாட்ஸ்அப்பிலும் தொடங்கப் போகிறது.

இங்கே கருத்து பரிமாற்றம் end-to-end encryption கொண்டது என்பதால், உங்கள் உரையாடல் முற்றிலும் பாதுகாப்பானது. பல தளங்களில் ஒரே நேரத்தில் இதைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இது Android, iOS, Windows Phone, Windows, MacOS, Linux மற்றும் web ஆகியவற்றை ஆதரிக்கிறது.

வாட்ஸ் அப்-வுக்கு வந்த ஆப்பு

இந்நிலையில் வாட்ஸ்அப் பயனாளிகளின் தகவல்கள் அனைத்தும் இனி பேஸ்புக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதாவது வாட்ஸ் அப் செயலி தன் பயனாளர்களை அவர்களது தொலைபேசி எண், இருப்பிடம் உள்ளிட்ட சுய விவரங்களை பேஸ்புக்கில் பதிவிடும் வகையில் புதிய அப்டேட்டினை வெளியிட்டுள்ளது.இதனையடுத்து சிக்னல், டெலிகிராம் போன்ற என்கிரிப்டட் செயலிகளை மெஸேஜ்ஜுகள் அனுப்ப பயன்படுத்துமாறு உலகின் நம்பர் 1 பணக்காரரான டெல்ஸா நிறுவன அதிபர் எலோன் மஸ்க் பரிந்துரைத்துள்ளார்.

வரும் பிப்ரவரி 8ம் தேதிக்குள் புதிய அப்டேட்டிற்கு Accept செய்யவில்லை எனில் பயனாளர்கள் செயலியில் நுழைய முடியாது என்று கூறப்படுகிறது. இதனால் பயனாளர்கள் வாட்ஸ் அப் செயலியை விட்டு வெளியேறி மாற்று செயலிகளை பயன்படுத்த நேரிட்டுள்ளது என்று பலரும் செய்தி பகிர்ந்து வருகிறார்கள்.