September 20, 2021

மதங்களைக் கடந்த முஸ்லிம் பெண்ணின் மனிதாபிமானம்!

தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம், ஹன்ம கொண்டா பகுதியில் ஆதரவற் றோர்களுக்கான முதியோர் இல்லத்தை யாகூ பீவி எனும் முஸ்லிம் பெண் நடத்தி வருகிறார். இவரது இல்லத்தில் தங்கியிருந்த 70 வயதான கே. ஸ்ரீனிவாஸ் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கை, கால்கள் பாதி செயலிழந்த நிலையில், இவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிறுத்தத்தில் யாகூப் பி மீட்டார். அப்போது தனது குடும்பத்தால் அனாதையாக விடப்பட்டதாக ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார்.

woman july 9

இரண்டு ஆண்டுகளாக முதியோர் இல்லத்தில் இருந்த ஸ்ரீனிவாஸ் உயிரிழந்தது குறித்து அவரது மகனுக்கு தெரிவிக்கப்பட்ட போது, தான் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டதால், இந்து முறைப்படி சடங்குகளை செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார். முன்னதாக கடைசி நேரத்தில் தனக்கு இந்து சம்பிரதாயப்படி இறுதி சடங்குகள் நடத்தி வைக்கும்படி யாகூ பீவியிடம் அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து யாகூ பீவி முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் தானே முன்னின்று இந்து சம்பிரதாயப்படி இறுதி சடங்கு நடத்த முடிவெடுத்தார். அதன்படி முதியோர் இல்லத்தில் இருந்து ஹன்ம கொண்டா இடுகாடு வரை முதியவரின் சடலத்துடன் முன்னால் தீச்சட்டி ஏந்தி நடந்து சென்றார்.பின்னர் இடுகாட்டில் இந்து முறைப்படி அனைத்து சடங்கு களையும் யாகூ பீவி செய்து வைத்து அவரது கடைசி ஆசையை நிறைவேற்றி வைத்தார்.

பின்னர் இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறும்போது, ‘‘முதியவர் கடந்த 2 ஆண்டுகளாக என்னுடைய பராமரிப்பில் இருந்து வந்தார். எனது தந்தையாகவே அவரை பாவித்தேன். இதன் காரணமாகவே மதத்தை மறந்து அவரது மகளாக இந்து முறைப்படி இறுதி சடங்குகள் செய்து வைத்தேன். இது என்னுடைய கடமை மட்டுமல்ல, மனிதாபிமானமும் கூட” என்றார்.