October 19, 2021

நேஷனல் ஹைவேஸில் டெக்னிக்கல் மேனேஜர் ஜாப் ரெடி!

இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குவதுதான் நேஷனல் ஹைவேஸ் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் என்.எச்.ஏ.ஐ., ஆகும். இந்தியா முழுமையும் தற்போது அதிகரித்து வரும் நான்கு வழிச்சாலைகளில் இந்தப் பெயரை நாம் கவனித்திருப்போம். பெருமைக்குரிய இந்த நிறுவனத்தில் தற்சமயம் காலியாக உள்ள 40 துணை மேலாளர் (டெக்னிகல்) இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது : விண்ணப்பதாரர்கள் 31.07.2017 அடிப்படையில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : 31.07.2017 அடிப்படையிலான கேட் தேர்வில் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிப்பது எப்படி ? : இந்தப் பதவிக்கு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என்ற இரண்டு முறைகளிலும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் பதிவுக்குப் பின்னர் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளை அனுப்ப வேண்டும். M.N. Ghei, Deputy General Manager (HR-Admn-II), National Highways Authority of India, G-5&6, Sector-10, Dwaraka, New Delhi 110 075.

கடைசி நாள் : 31.07.2017

விபரங்களுக்கு : ஆந்தை வேலைவாய்ப்பு