October 17, 2021

வெஸ்ட் இண்டீஸ் டீமுடன் மோதப் போகும் – இந்திய அணி வீரர்கள் பட்டியல்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 டி-20, 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப் பட்டுள்ளது. பந்த், ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சஹால், குல்தீப், சாஹர், ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விராட் கோலி தலைமையில் ரோஹித் சர்மா, தவான், ராகுல் ஆகியோருக்கு இடம் அளிக்கபட்டுள்ளது.

ஆம்.. ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட துணைக் கேப்டன் ரோகித் சர்மா அணியில் இடம் பிடித்துள்ளார். காயத்தால் விளையாடாமல் இருந்து புவனேஷ்வர் குமார் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் கிரிக்கெட் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முகமது ஷமி டி20 கிரிக்கெட் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வங்கதேச தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டிருந்த சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் குருணால் பாண்டியா நீக்கப்பட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சசாளர் ஆல்-ரவுண்டர் ஷிவம் டுபே இரண்டு தொடர்களுக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.

டி20 தொடருக்கான இந்திய அணி விவரம்:

1. விராட் கோலி, 2. ரோகித் சர்மா, 3. ஷிகர் தவான், 4. கே.எல். ராகுல், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. மணிஷ் பாண்டே, 7. ரிஷப் பந்த், 8. ஷிவம் டுபே, 9. வாஷிங்டன் சுந்தர், 10. ஜடேஜா, 11. சாஹல், 12. குல்தீப் யாதவ், 13. தீபக் சாஹர், 14. முகமது ஷமி, 15. புவனேஷ்வர் குமார்.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம்:

1. விராட் கோலி, 2. ரோகித் சர்மா, 3. ஷிகர் தவான், 4. கே.எல். ராகுல், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. மணிஷ் பாண்டே, 7. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), 8. ஷிவம் டுபே, 9. கேதர் ஜாதவ், 10. ஜடேஜா, 11. சாஹல், 12. குல்தீப் யாதவ், 13. தீபக் சாஹர், 14. முகமது ஷமி, 15. புவனேஷ்வர் குமார்.

டி20 கிரிக்கெட் தொடர் டிசம்பர் 6 ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 11 ஆம் தேதி வரை நடக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 15 ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடக்கிறது.