March 27, 2023

திருச்சி நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில் ஆசிரியர் போஸ்டிங் தயார்!

தொழில் நுட்ப படிப்புகளில் பெயர் பெற்ற நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனம் சுருக்கமாக என்.ஐ.டி., என்ற பெயரால் அறியப்படுகிறது. முன்பு இது ரீஜனல் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. திருச்சியில் உள்ள பெருமைக்குரிய இந்த கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் பிரிவுகளான அசிஸ்டென்ட் புரொபசர், புரொபசர், அசோசியேட் புரொபசர் ஆகிய பிரிவுகளில் காலியாக இருக்கும் 177 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம் : ஆர்க்கிடெக்சரில் 9, சிவில் இன்ஜினியரிங்கில் 19, கெமிக்கலில் 6, எனர்ஜி அண்டு என்விரான்மென்டில் 5, கெமிஸ்ட்ரியில் 9, சி.எஸ்.,சில் 11, இ.சி.இ.,யில் 14, இ.இ.இ.,யில் 15, ஹியுமானிடிசில் 7, இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்டு கன்ட்ரோல் இன்ஜினியரிங்கில் 8, மெக்கானிக்கலில் 14, மெட்டலர்ஜிகல் அண்டு மெட்டீரியலில் 11, மேனேஜ்மென்ட் ஸ்டடீசில் 10, கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் 9, கணிதத்தில் 11, இயற்பியலில் 6, புரொடக்சனில் 13ம் காலியிடங்கள் உள்ளன.

வயது: வயது குறித்த தேவைகளுக்கு இந்த கல்வி நிறுவனத்தின் பணி நியமன விளம்பரத்தைப் பார்க்கவும்.
கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. இன்ஜினியரிங் இடங்களுக்கு பி.இ., அல்லது பி.டெக்., படிப்பு அல்லது எம்.இ., அல்லது எம்.டெக் படிப்பு தேவைப்படும். இதர பணியிடங்களுக்கு பட்டப் படிப்போ அல்லது பி.எச்.டி., படிப்போ தேவைப்படும். எனவே சரியான மற்றும் முழுமையான தகவல்களை இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

இதர தேவை: நெட் அல்லது ஸ்லெட் அல்லது கேட் தேர்வு மதிப்பெண்களும் விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து தேவைப்படும்.

தேர்ச்சி முறை: விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, டிபார்ட்மென்ட் பிரசன்டேஷன், நேர்காணல் என்ற முறைகளில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் கிடைக்கும் பிரின்ட் அவுட்டுடன் உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Registrar, National Institute of Technology, Tiruchirappalli – 620015. TamilNadu.

விண்ணப்பக் கட்டணம்: 1000 ரூபாய்.

கடைசி நாள்: 2017 நவ., 21.

விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு