Exclusive

“வரி, வட்டி, இலவச திட்டங்கள்” – டிரெண்டிங் ஆன பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்!

“இலவச திட்டங்கள் கூடாது என மாநில அரசுகளிடம் மத்திய அரசு கூறுவதற்கு என்ன உரிமை இருக்கிறது?… எந்த அடிப்படையில் இந்த கருத்தைக் கூறுகிறது?…இலவச திட்டங்கள் கூடாது என அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளதா? அதன் அடிப்படையில் கூறுகிறீர்களா? ”என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அடுக்கடுக்கான கேள்விகளை காட்டமாக எழுப்பியுள்ளது ட்ரெண்டிங் ஆகி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், புந்தேல் கண்ட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, இலவத் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என தெரிவித்திருந்தார்.மேலும், “இலவசத் திட்டங்களை அறிவித்து மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்க முடியும் என சிலர் கருதுகின்றனர். இந்த மோசமான கலாச்சாரத்தை மக்கள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும். இந்திய அரசியல் இருந்து இலவசத் திட்டக் கலாச்சாரம் வேரறுக்க வேண்டும்” எனவும் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து இலவச திட்டங்கள் குறித்த விவாதங்கள் பொதுவெளியில் எழுந்தன. மோடியின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், “பொதுமக்களுக்கான சமூக நலத்திட்டங்களை இலவசம் என்று ஒரு குறுகிய அடைப்புக்குள் அடக்கிடாமல், கிராமப்புற ஏழை எளிய மக்களிடையே நடைபெற்றுள்ள பொருளாதாரப் புரட்சி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று கூறி பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில், இலவச திட்டங்களை அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளாக வழங்கலாமா என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றில் நடைபெற்ற விவாதம் ஒன்றில், தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் நெறியாளர் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

அதில்,இலவசங்கள் காரணமாக திறன் வளராது என்று மோடி கருதுகிறார். இலவசங்கள் தற்காலிக தீர்வை மட்டுமே தரும். மாறாக திறனை, திறமையை வளர்க்க கூடிய நலத்திட்டங்களை அரசு செய்ய வேண்டும் என்று மோடி நினைக்கிறார் என்று கூறினார்..

இதற்கு பதிலளித்த பழனிவேல் தியாகராஜன் “ஒரு விஷயத்தில் அடிப்படை இருக்க வேண்டும் அல்லது உங்களுக்கு சிறப்பு நிபுணத்துவம் இருக்க வேண்டும்.நீங்கள் பொருளாதாரத்தில் இரட்டை பி. எச். டி ஆக இருக்க வேண்டும் அல்லது உங்களுக்கு உன்னத பரிசு இருக்க வேண்டும் அல்லது எங்களை விட உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று சொல்லும் ஒன்று உங்களிடம் இருக்க வேண்டும். அல்லது நீங்கள் நீங்கள் வளர்ந்த ஒரு செயல்திறனை பதிவு செய்திருக்க வேண்டும், அல்லது பொருளாதாரத்தை வளர்த்து இருக்கவேண்டும். இதில் எதுவும் நீங்கள் செய்யவில்லை. நாங்கள் ஒன்றிய அரசின் கருவூலத்திற்கு 1 ரூபாய் செலுத்தினால் எங்களுக்கு 30, 33 பைசா கிடைக்காது , நான் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். என் முதல்வர் எனக்கு வேலை கொடுத்தார். நான் அதை நன்றாக செய்கிறேன்.

உங்களின் சாதனைகள், செயல்பாடுகள் எங்களை விட சிறப்பாக இருந்தால் எங்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லாம். நீங்கள் கடனை அடைத்துவிட்டீர்கள், பொருளாதாரத்தை சரி செய்துவிட்டீர்கள், தனி நபர் வருமானத்தை உயர்த்திவிட்டீர்கள் என்றால் உங்கள் பேச்சை நாங்கள் கேட்கலாம். அது எதுவுமே இல்லாத போது உங்களின் பேச்சை நாங்கள் ஏன் கேட்க வேண்டும்?” என்று கூறினார்.

அத்துடன் ‘இலவச திட்டங்கள் கூடாது என மாநில அரசுகளிடம் மத்திய அரசு கூறுவதற்கு என்ன உரிமை இருக்கிறது?… எந்த அடிப்படையில் இந்த கருத்தைக் கூறுகிறது?…இலவச திட்டங்கள் கூடாது என அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளதா? அதன் அடிப்படையில் கூறுகிறீர்களா? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை காட்டமாக எழுப்பினார்.

அவரின் இந்த பேச்சு இணையத்தில் கடும் வைரலாகியுள்ளது. அதிலும் வடஇந்தியர்கள் தமிழ்நாடு நிதியமைச்சரின் பேச்சை பாராட்டி வருகின்றனர். வடஇந்தியாவில் இப்படி பேச யாரும் இல்லாத நிலையில் தமிழக அமைச்சர் இந்தியா முழுமைக்கும் பேசி வருகிறார் என வடஇந்தியவர்கள் சிலாகித்து வருகின்றனர்.

aanthai

Recent Posts

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பு : இந்தியா, சீனா புறக்கணிப்பு!

உக்ரைனில் உள்ள 4 பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பை இந்தியா, சீனா புறக்கணித்துள்ளது.…

6 hours ago

பொன்னியின் செல்வன் – விமர்சனம்!

முன்னொரு காலக்கட்டத்தில் - அதாவது ஊமைப் படங்கள் உருவான காலத்திலும் சரி, பேசும் படமாக அது வளர்ச்சி அடைந்த சூழலிலும்…

1 day ago

ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி : வீடு, வாகன கடன்களுக்கான வட்டி அதிகரிக்கும்!

கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் 0.5 சதவீதத்தை உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். ரெப்போ விகிதம்…

1 day ago

சமந்தா & தேவ் மோகன் நடிப்பில் தயாரான ‘ஷாகுந்தலம்’, 3 டி – யில் ரிலீஸ்!

உலகப்புகழ் பெற்ற காளிதாசின்  'அபிஞான ஷாகுந்தலம்' எனும் சமஸ்கிருத நாடகத்தினை தழுவி எடுக்கப்படும்  'ஷாகுந்தலம்' மக்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 days ago

“’ஆதார்’ படத்தின் உள்ளடக்கம், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படக்கூடியத் தகுதி கொண்டது!

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ திரைப்படம், சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி…

2 days ago

This website uses cookies.