டாஸ்மாக் எலைட் சரக்கு விலை எகிறியது!

டாஸ்மாக் எலைட் சரக்கு விலை எகிறியது!

மிழகத்தில் மது பானங்கள் அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகள் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அதே டாஸ்மாக் எலைட் என்ற மதுபானக் கடைகளில் அன்னிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் விலை ரூ.1,990-ல் இருந்து ரூ.21,130 வரை உள்ளது.

கடந்த ஒன்றஅரை ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விற்பனை குறைந்துள்ளதால் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதையொட்டி சென்ற ஆண்டு கொரோனா பாதிப்பு காலத்தில் ஏற்கனவே மது பானங்கள் விலை உயர்த்தப்பட்டதைப் போல் தற்போதும் உயர்த்தப்பட உள்ளன.

அதாவது இந்த வகை மது பான பானங்கள் விலையை பொறுத்தவரை ஜானி வாக்கர் விஸ்கி, பெய்லீஸ் ஐரிஸ், வோட்கா உள்ளிட்ட மதுபானங்களை டாஸ்மாக் இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது. இதை அடுத்து கவோல் இலா வகை விஸ்கி 750 எம்.எல் விலை ரூ.6,210ல் இருந்து ரூ.6,220ஆக உயர்கிறது. ஜானி வாக்கர் டபுள் பிளேக் விஸ்கி 750 எம்.எல் ரூ.4,740ல் இருந்து ரூ.5,260ஆக உயர்கிறது. இறக்குமதி மதுபானங்களின் அதிக விலை கொண்ட ஜானி வாக்கர் புளூ லேபிள் விஸ்கி ரூ.21,130ல் இருந்து ரூ.21,300ஆக உயர்கிறது.

ஏற்கனவே பழைய விலையில் உள்ள மதுபானங்களை முழுவதுமாக விற்பனை செய்து முடிக்கப்பட்டுள்ளதால் இனி புதிய விலையில் மதுபானங்கள் விற்கப்பட உள்ளது. இதனால் தமிழக கஜானா நிறையும் வாய்ப்பிருக்கிறது.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!