October 19, 2021

உள்ளாட்சித் தேர்தல் நடத்த நிதியெல்லாம் ஒதுக்கி தயாரா இருக்கோம்!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக இருப்பதாக சட்டசபையில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

tn mar 25a

இதுகுறித்து, சட்டசபையில் நேற்று நிதிநிலை அறிக்கை மீது 5-வது நாளாக விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் ராமசாமி கூறும்போது, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்ந்து தள்ளிக்கொண்டே போகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி இருந்தபோது, இது தொடர்பாக சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பல காரணங்களை சொல்லி நாட்கள் கடத்தப்படுகிறது. எப்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதற்கு நிதி அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளிக்கும் போது, ஒரு சட்டமன்ற உறுப்பினர் உயிரிழந்த பின்னர் அந்த தொகுதிக்கு 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பொதுத்தேர்தல் போன்றவற்றுக்கு இப்படி கிடையாது. மேலும் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்காக ரூ.127 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது என்றார்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குறுக்கிட்டு, அவையில் நிதி அமைச்சர் தவறான தகவலை தருகிறார். உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் 5 ஆண்டுகள் முடிந்த பின்னர் அடுத்த 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றார்.