October 21, 2021

தமிழக அரசின் பட்ஜெட் 2017-18 – ஹைலைட்ஸ்!

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று 2017-18ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை பட்ஜெட்டுடன் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்றார். அங்கு ஜெயலலிதா நினைவிடத்தில் பட்ஜெட்டை வைத்து வணங்கினார். இதையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் தனது இல்லத்திலிருந்து நேராக ஜெயலலிதா சமாதிக்கு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின், சட்டசபைக்கு புறப்படும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஜெயலலிதா கொண்டுவந்த மக்கள் நலத் திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தும்’ என்றார்.

budget mar 16 b

பின்னர் சட்டப்பேரவைக்கு சென்ற ஜெயக்குமார், பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்வதற்கு சபாநாயகரிடம் அனுமதி கோரினார். சபாநாயகர் அனுமதி அளித்ததையடுத்து பேரவையில் காலை 10.30 மணிக்கு நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் 2017-18ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர், பட்ஜெட்டில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து உரையாற்றினார்.

சபை கூடியதுமே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது குறித்து வலியுறுத்தினார். ஆனால் இதற்கு மறுப்புத் தெரிவித்த சபாநாயகர் பட்ஜெட் தாக்கல் செய்ய அனுமதித்தார். இதையடுத்து, அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட் உரையை வாசித்தார். அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டிய அவர், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனுக்கும் நன்றி தெரிவித்தார். இதைக் கண்டித்து திமுக மற்றும் ஓ.பி.எஸ். அணியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

குற்றவாளிகள் பெயரை உச்சரிக்க எதிர்ப்புத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சசிகலா, டிடிவி தினகரன் பெயரை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வலியுறுத்தினார். இதற்கு அவை முன்னவர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். எதிர்க்கட்சியினரின் அமளியால் பட்ஜெட் தாக்கல் 2 முறை நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கடும் கூச்சல் குழப்பத்துக்கிடையே அமைச்சர் ஜெயக்குமார் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள்:

budget_2_3144268f

தமிழகத்தில் கடன் தொகையாக ரூ.3,14,366 கோடி உள்ளது.

2017-18இல் வருவாய் பற்றாக்குறை ரூ.15,930 கோடியாக இருக்கும்.

மாநிலத்தின் வருவாய் தொகையாக ரூ.99,590 கோடி உள்ளது.

2017-18ஆம் ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை ரூ. 41,977 கோடியாக உள்ளது.

*அரசு ஊழியர்களுக்கான சம்பளம்: ரூ.46,332 கோடி
*ஓய்வூதியம்: ரூ.20,577 கோடி
-ரூ41,965 கோடி கடன் வாங்க திட்டம் –
நிதிபற்றாக்குறை 2.79% ஆக இருக்கும்
அவினாசி- அத்திக்கடவு திட்டத்துக்கு ரூ250 கோடி ஒதுக்கீடு
தமிழ் வளர்ச்சிக்கு ரூ48 கோடி நிதி ஒதுக்கீடு –
காவல்துறைக்கு ரூ1,483 கோடி ஒதுக்கீடு –
தீயணைப்பு துறைக்கு ரூ253 கோடி –
காவல்துறையை நவீனமயமாக்க ரூ47.91 கோடி –
நகர்ப்புற வறுமை ஒழிப்புக்கு ரூ272 கோடி –
காவல்துறை வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ450 கோடி –
சிறப்பு காவல் இளைஞர் படையில் 10,500 பேர் சேர்க்கப்படுவர் –
49 காவல்நிலையங்கள் கட்ட ரூ30 கோடி ஒதுக்கீடு –
உள்ளாட்சித் தேர்தல் நடத்த ரூ174 கோடி ஒதுக்கீடு –
பள்ளி கல்விதுறைக்கு ரூ26,932 கோடி – –
-ஈழ அகதிகள் நலனுக்கு ரூ116 கோடி ஒதுக்கீடு
-இளைஞர் நலனுக்கு ரூ165 கோடி ஒதுக்கீடு
-பயிர்காப்பீடு மானிய திட்டத்துக்கு ரூ522 கோடி ஒதுக்கீடு
-பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ988 கோடி
– சுகாதாரத்துறைக்கு ரூ.10,158 கோடி ஒதுக்கீடு –
_ஊரக தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.980 கோடி ஒதுக்கீடு
_நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.10,067 கோடி,
-பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.265 கோடி,
-ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.3,009 கோடி ஒதுக்கீடு –
-விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை வழங்க ரூ.127.26 கோடி ஒதுக்கீடு
-20,000 பசுமை வீடுகள் ரூ420 கோடியில் கட்டபடும் –
-இலவச ஆடு மாடுகள் வழங்க ரூ182 கோடி நிதி ஒதுக்கீடு
-கால்நடை பராமரிப்பிற்கு ரூ.1,161 கோடி நிதி ஒதுக்கீடு
* திருமண உதவித் திட்டங்களுக்கு ரூ.723 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு
* விவசாய பயிர்க் கடன்களுக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு