தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம்!

தமிழக பாஜக தலைவராக 2014ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தவர்தமிழிசை சவுந்தர்ராஜன். கடந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் அவர் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் .இதனால் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

இது போல் கேரள ஆளுநராக ஆரிஃப் முகமது கானை மத்திய அரசு நியமித்துள்ளது. ஆரிஃப் கான் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இமாச்சலப் பிரதேச ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவை மத்திய அரசு நியமித்துள்ளது. மாராட்டிய மாநில ஆளுநராக பகத்சிங் கோஷாரியை மத்திய அரசு நியமித்துள்ளது.

கவர்னர் நியமனம் பற்றி தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது,’எதிர்பாராத நேரத்தில் இந்த பதவி எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதில் மகிழ்ச்சி. கடும் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதை, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நிரூபித்துள்ளனர். அவர்களுக்கு ஜே.பி.நட்டாவுக்கும் நன்றி தமிழக பாஜக தலைவராக இருந்த எனக்கு அதை விட பெரிய பதவி கொடுத்துள்ளது தலைமை’ என்று தெரிவித்துள்ளார்.