தமிழகத்தில் 2 தொகுதிகளில் தேர்தல் அறிவிப்பு- புகார் கொடுக்க வெப்சைட் ரெடி!

தமிழகத்தில் 2 தொகுதிகளில் தேர்தல்  அறிவிப்பு- புகார் கொடுக்க வெப்சைட் ரெடி!

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பண விநியோகம் அதிகம் நடைபெறும் தொகுதிகளாக தஞ்சாவூர், அரவக்குறிச்சி கண்டறியப்பட்டுள்ளதால், கண்காணிப்பை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளளது. இதற்காக தேர்தல் துறையின் செல்லிடப்பேசி  தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதள பக்கத்தில் http://www.elections.tn.gov.in/VoterServices.aspx புகார்களை தெரிவிக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. “கடந்த பொதுத் தேர்தலைப் போன்றே, நவீன தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தவுள்ளோம். புகார்களை அளிக்கவும், தகவல்களைத் தெரிவிக்கவும் தனி வசதி செய்யப்படும். புதிய வசதி ஓரிரு நாள்களில் நடைமுறைக்கு வரும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ellection oct 18

முன்னதாக தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் 16-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்த போது. வாக்குப்பதிவுக்கு முன்னதாக, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது. அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், தி.மு.க. சார்பில் கே.சி.பழனிச்சாமியும் மற்றும் 34 வேட்பாளர்களும், தஞ்சை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரங்கசாமியும், தி.மு.க. சார்பில் டாக்டர் அஞ்சுகம் பூபதியும் மற்றும் 10 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

பணம் பட்டுவாடா புகார் காரணமாக அந்த இரு தொகுதிகளின் தேர்தலும் தள்ளிவைக்கப்பட்டது. மற்ற 232 தொகுதிகளுக்கும் மே 16-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.மே 19-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எம்.சீனிவேல், உடல் நலம் பாதிக்கப்பட்டதால், வாக்குப்பதிவுக்கு மறுநாள் (மே 17-ந் தேதி) மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மே 25-ந் தேதி எம்.சீனிவேல் மரணம் அடைந்ததால், திருப்பரங்குன்றம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (நவம்பர்) 19-ந் தேதி (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறும் என்று நேற்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி, இந்த 3 தொகுதிகளிலும் வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய நவம்பர் 2-ந் தேதி கடைசி நாள் ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 3-ந் தேதி நடை பெறும். போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற 5-ந் தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஓட்டுப்பதிவு 19-ந் தேதி நடைபெறும்.

பதிவான வாக்குகள் 22-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இடைத்தேர்தல் அட்ட வணையை தேர்தல் கமிஷன் நேற்று டெல்லியில் வெளியிட்டது.(திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக இருந்ததால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவதாகவும், அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படாததால், அந்த தொகுதிகளுக்கான தேர்தல் பொதுத்தேர்தலாக நடத்தப்படுவதாகவும் தேர்தல் கமிஷன் கூறி உள்ளது.)தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, 3 தொகுதிகளிலும் நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நெல்லித்தோப்பு சட்டசபை தொகுதி மற்றும் லகிம்பூர் பாராளுமன்ற தொகுதி, பைதாலங்சோ சட்டசபை தொகுதி (அசாம்), ஹயுலியாங் சட்டசபை தொகுதி (அருணாசலபிரதேசம்), ஷாதோல் பாராளுமன்ற தொகுதி, நெபாநகர் சட்டசபை தொகுதி (மத்தியபிரதேசம்), கூச்பெகர், தம்லுக் பாராளுமன்ற தொகுதிகள், மான்டேஸ்வர் சட்டசபை தொகுதி (மேற்கு வங்காளம்), பர்ஜாலா, கோவாய் சட்டசபை தொகுதிகள் (திரிபுரா) ஆகியவற்றுக்கும் நவம்பர் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 10 சட்டசபை தொகுதிகளுக்கும், 4 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் நவம்பர் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது எனப்து குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!