தமிழிசை ஆகிய நான் தெலுங்கானா கவர்னர் ஆகிப்புட்டேன்!

தமிழக பாஜக தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா ஆளுநராக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பி லிருந்து விலகினார். தெலுங்கானா மாநில ஆளுநராக இன்று தமிழிசை சவுந்திரராஜன் பதவி யேற்றார். ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா நடை பெற்றது. இவருக்கு தெலுங்கானா மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ராகவேந்திரா எஸ் சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் ஆளுநர்களில், 58 வயதில் ஆளுநராகி, நாட்டின் ‘இளம் ஆளுநர்’ என்ற சிறப்பை தமிழிசை பெற்றுள்ளார்.

பிரபலமான மகப்பேறு மருத்துவர், சென்னை மருத்துவப் பிரிவு செயலாளர், கவிஞர், பேச்சளர் மற்றும் தமிழக பா.ஜ.க கட்சித் தலைவர் போன்ற பல பொறுப்புகளை வகித்த தமிழிசை சௌந்த ரராஜன் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி, அவர் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதை அடுத்து இன்று, தெலங்கானா ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்டார், இவரின் பதவியேற்பு விழா ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்றது. அம்மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ். சவுகான், தமிழிசைக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த விழாவில் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், மாநில அமைச்சர்கள், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பி.தங்கமணி ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தேமுதிக பொருளாளர் சுதீஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தனும் இவ்விழாவில் கலந்துகொண்டார். பதவியேற்ற பின்னர் தமிழிசை, தனது தந்தை குமரி அனந்தனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.