சொன்னா நம்போணும் : தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் டாப்போ டாப்!
தேசிய சராசரி வளர்ச்சி விகிதத்தை விட தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 2019 – 20ம் ஆண்டில் 2 மடங்கு அதிகமாக உள்ளது . கடந்த மூன்று ஆண்டுகளில் தேசிய சராசரி வளர்ச்சி விகிதத்தை விட தமிழகத்தில் வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. அதாவது இது கடந்த ஆண்டில் 2 மடங்கு அதிகரித்துள்ளதோடு, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தமிழகம் முதலிடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியானது, அதன் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. குறிப்பாக வேளாண்மை, அதன் உபதொழில்கள், கனிமம்,சுரங்கத் தொழில்களை உள்ளடக்கிய முதன்மை உற்பத்திப் பிரிவு, தொழிற்சாலை உற்பத்தி மற்றும் கட்டுமானம் உள்ளிட்டவை அடங்கிய 2-ம் நிலை உற்பத்தி மற்றும் சேவைப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கியே மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு கணக்கிடப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தொடர்ந்து 2-வது இடத்தில் இருந்தது. ஆனால், கடந்த 2019-20 நிதியாண்டில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. மேற்கில் உள்ள மாநிலங்களின் தகவல் தொகுப்புகள் இல்லாத நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.
அதாவது 2017 – 2018ம் ஆண்டில் தேசிய சராசரி வளர்ச்சி விகிதம் 7 சதவீதம் ஆகும் அதே ஆண்டில் தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 8.59 ஆகும். 2018 19 ஆம் ஆண்டு தேசிய சராசரி வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதம் ஆகும் அதே ஆண்டு தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 7.95 சதவீதமாகும் 2019 – 2020 ம் ஆண்டில் மூன்றாவது ஆண்டாக தேசிய சராசரி வளர்ச்சி விகிதத்தை விட தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் கூடுதலாக உள்ளது. இந்த மூன்றாவது ஆண்டில் தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2011 – 12 ஆம் ஆண்டில் விலைவாசி நிலவரத்தை அடிப்படையாகக்கொண்டு இந்த வளர்ச்சி வீதம் புள்ளிவிவரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.
தொடர்ச்சியாக 2012 – 13 ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து வருகின்றது குறிப்பிடத்தகுந்தது.
2012 – 13 ஆம் ஆண்டில் மாநில தேசிய ஒட்டுமொத்த உற்பத்தி அளவு 791824 கோடி ரூபாய் ஆகும்.
2013 – 14 ஆம் ஆண்டில் மாநில ஒட்டுமொத்த உற்பத்தி ரூ.851 976 கோடியாக உயர்ந்தது.
2014-15ம் ஆண்டில் மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூபாய் 893 915 கோடி ஆகும்.
2015- 16ஆம் ஆண்டில் மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூபாய் 967 562 கோடியாகும்.
2016-17ஆம் ஆண்டில் மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூபாய் 1036762 கோடியாகும்.
2017-18ஆம் ஆண்டில் மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூபாய் 1125793 கோடியாகும்.
2018-19ஆம் ஆண்டில் மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூபாய்1215307 கோடியாகும்.
2019-20ஆம் ஆண்டில் மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூபாய் 1312929 கோடியாகும்.
தமிழ்நாடு மாநிலத்தின் விவசாய உற்பத்தி. தொழில்துறை உற்பத்தி, சேவைத் துறை ஆகிய மூன்று துறைகளும் சிறப்பாக இயங்கியது இந்த வளர்ச்சிக்கு அடிப்படையான காரணமாக கூறப்பட்டாலும் பொருளாதாரத்தை சீரமைக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்த நிலையில், 2019-20நிதி ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தமிழகத்தின் பயணத்தில் சிறிய சறுக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுத் துறை வட்டாரங்கள் தெரி வித்தன.