மெட்ராஸ் எனப்படும் சென்னையை சுற்றிப் பார்க்க 10 ரூபாய் மட்டுமே!
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மக்களிடையே சுற்றுலாவை பிரபலப்படுத்தும் நோக்கத்துடனும் 10 ரூபாய் கட்டணத்தில் சென்னை நகரத்தில் புத்தாண்டு (1.1.2020) அன்று 1 நாள் மட்டும் சிறப்பு சுற்றுலாவை அறிமுகப்படுத்தி உள்ளது.
சுற்றுலா வளாகத்தில் இருந்து சுற்றுலாப் பொருட்காட்சி (தீவுத் திடல்) தொடங்கி மெரினா கடற் கரை, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயம், அஷ்டலட்சுமி கோயில், ஆறுபடை முருகன் கோயில், கிண்டி குழந்தைகள் பூங்கா ஆகிய இடங்களுக்குச் சென்று திரும்பும் வகையில் சுற்றுலா மேற்கொள்ளலாம்.
காலை 9:00 மணியில் இருந்து மாலை 6:00 மணி வரை பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகளை ஓரிடத்திலிருந்து அடுத்த சுற்றுலா மையத்துக்கு அழைத்துச் செல்லும் குறிப்பிட்ட இடங்களில் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம், எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம்.
புத்தாண்டு சுற்றுலா தொடர்பாக பயணிகள் அணுக வேண்டிய முகவரி
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்,
சுற்றுலா வளாகம், வாலாஜா சாலை, சென்னை-2,
தொலைபேசி: 04425333333 / 25333444 / 25333857 / 25333850-54
கட்டணமில்லா தொலைபேசி: 180042531111
இணையதள முகவரி: www.tamilnadutourism.org