Exclusive

தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்த ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’!

மிழ்நாட்டின் கடன் அளவு மார்ச் 2021 நிலவரப்படி 4,85,502.54 கோடி ரூபாயாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டிருப்பதாக, தமிழகத்தின் முன்னாள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது முந்தைய பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார். அதே போல அடுத்த மார்ச் 2022-ம் ஆண்டில் தமிழகத்தின் கடன் 5,70,189.29 கோடி ரூபாயாக அதிகரிக்கலாம் எனவும் அவ்வுரையில் அவர் தெளிவாகக் குறிப்பிட்டு இருந்ததும் கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் அளவு சுமார் 1,305 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதாவது சுமார் 13 மடங்கு கடன் அதிகரித்திருக்கிறது. என்பதும் நினைவிருக்கும். இச்சூழலில் தமிழக சட்டசபையின் 16-வது கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையில் முக்கிய அம்சமாக தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்க, ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’ ஒன்று உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவில் உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சிபெறச் செய்து பொருளாதாரத்தின் பயன்களை அனைவரும் பெற இந்த அரசு உறுதி செய்யும்’ என ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்தக் குழுவில் அங்கம் வகிப்பவர்கள் விவரம் பின்வருமாறு:-

1. ரகுராம் ராஜன் – இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளார். இவர், இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி, இந்திய நிதியியல் சேவைத் துறையில் பல புதுமைகள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான முக்கியத்துவம் எனப் பல முக்கியப் பணிகளைச் செய்துள்ளார்.

2. எஸ்தர் டப்ளோ – நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர்

பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜியின் மனைவியும், அவருடன் இணைந்து நோபல் பரிசு வென்றவருமான எஸ்தர் டப்லோ, புதிய பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ளார். உலக நாடுகளில் இருக்கும் வறுமையைத் தீர்க்கும் வழிகளைக் கண்டறிந்ததற்கு நோபல் பரிசு பெற்றுள்ளதால், தமிழகத்தின் வறுமையை ஒழிக்க இவரின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. அரவிந்த் சுப்ரமணியன் – மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர்

மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன், தனது பதவியில் இருந்து விலகிய நிலையில் தற்போது தமிழக அரசு உருவாக்கியுள்ள புதிய பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ளார். இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் பணியாற்றிய அனுபவம் தமிழகத்தின் பொருளாதாரத்தை மேலும் உயர்த்த உதவும் என கருதப்படுகிறது.

4. ஜீன் ட்ரெஸ் – ராஞ்சி பல்கலைக்கழகம்; டெல்லி ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்

இந்தியாவில் சமூக நலத்திற்காகவும், பாலின சமத்துவமின்மைக்கு எதிராகவும் பணியாற்றி வரும் ஜீன் ட்ரெஸ், பெல்ஜியம் நாட்டில் பிறந்தவராவார். இவர் அமர்தியா சென், ஆன்கஸ் டியாடன் போன்ற நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் உடன் பணியாற்றியுள்ளார். மேலும், தற்போது டில்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ், ராஞ்சி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

5. நாராயணன் – மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர்

மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் எஸ். நாராயணன் சுமார் 40 வருடங்களாக மத்திய, மாநில அரசுகளுடன் பணியாற்றி வருகிறார். 2003 முதல் 2004 வரையில் இந்தியப் பிரதமருக்குப் பொருளாதார ஆலோசகராக இருந்தார். இதுமட்டும் அல்லாமல் நிதியமைச்சகம், வர்த்தகம் மற்றும் தொழிற்துறை, விவசாயம், பெட்ரோலியம் என 30க்கும் மேற்பட்டத் துறையில் பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தும் பணியில் பணியாற்றியுள்ளார்.

aanthai

Recent Posts

கால்பந்து போட்டியால் ஏற்பட்ட வன்முறையில் 129 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷியாவில் கால்பந்து போட்டியில் நடைபெற்ற வன்முறையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பல…

28 mins ago

தூய்மை நகரத்திற்கான பட்டியலில் தொடர்ந்து 6வது ஆண்டாக இந்தூர்!

2022ஆம் ஆண்டுக்கான தூய்மையான நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த…

45 mins ago

பவுடர் பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழாத் துளிகள்!

வெற்றிகரமான பத்திரிகை தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் நாயகனாக நடிக்க, வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை…

2 hours ago

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பு : இந்தியா, சீனா புறக்கணிப்பு!

உக்ரைனில் உள்ள 4 பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பை இந்தியா, சீனா புறக்கணித்துள்ளது.…

17 hours ago

கோடநாடு கொலை & கொள்ளை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம் – டிஜிபி உத்தரவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் கடந்த 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி…

2 days ago

பொன்னியின் செல்வன் – விமர்சனம்!

முன்னொரு காலக்கட்டத்தில் - அதாவது ஊமைப் படங்கள் உருவான காலத்திலும் சரி, பேசும் படமாக அது வளர்ச்சி அடைந்த சூழலிலும்…

2 days ago

This website uses cookies.