முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மதிப்பு 5 லட்சமானது!

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மதிப்பு 5 லட்சமானது!

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தற்போது ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையினை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் 11.1.2012 அன்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தொடங்கபட்டது. அத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் 1.58 கோடி குடும்பங்களுக்கு காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இதுவரை 26.96 லட்சம் நபர்கள் 5,133.33 கோடி ரூபாய் அளவிற்கு பயனடைந்துள்ளனர்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள், பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையினை, மேலும் உயர்த்தி வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையினை பரிசீலனை செய்து, 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையினை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.

இந்த புதிய திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, 1.12.2018-லிருந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.58 கோடி குடும்பங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஆண்டொன்றிக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகைக்கு கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!