October 20, 2021

இல்லந்தோறும் இணையம் திட்டத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற வாரீயளா?

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் ‘‘இல்லந்தோறும் இணையம்’’ திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி பகுதிகளிலும் விரிவுபடுத்தவுள்ளதைத் தொடர்ந்து, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

net nov 3

இதுகுறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் ஏற்கனவே பெற்றுள்ள ‘‘இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர்’’ உரிமத்தை பயன்படுத்தி, ‘‘இல்லந்தோறும் இணையம்’’ என்ற கொள்கையின் அடிப்படையில், அதிவேக அகண்ட இன்டர்நெட் சேவைகளை முதல் கட்டமாக 1.3.2016 முதல் தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் வழங்கி வருகிறது. குறைந்த கட்டணம் மற்றும் சிறப்பான சேவையின் காரணமாக இத்திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இரண்டாம் கட்டமாக, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் ‘‘இல்லந்தோறும் இணையம்’’ திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி பகுதிகளிலும் விரிவுபடுத்தவுள்ளது.எனவே, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துடன் இணைந்து, அதிவேக அகண்ட அலைவரிசை இன்டர்நெட் சேவைகளை வருவாய் பங்கீட்டு முறையில் வழங்குவதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விருப்பம் கோரும் விண்ணப்பத்தை இந்நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tactv.in) கட்டணமின்றி பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.11.2016 மாலை 3 மணி ஆகும்.

விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன், அவை கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும். தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விருப்பப்பட்டால், அவர்கள் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக தேசிய வங்கியிலிருந்து கடன் பெறுவதற்கு உதவி செய்யப்படும். எனவே, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துடன் இணைந்து இன்டர்நெட் சேவைகளை வருவாய் பங்கீட்டு முறையில் வழங்குவதற்கு விருப்பமுள்ளவர்கள் நவம்பர் 15–ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.