செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் திறக்கப்படும்!

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் திறக்கப்படும்!

நாடெங்கும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், விளையாட்டு அரங்குகள், வழிபாட்டு தளங்கள், நூலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டன.இதனை அடுத்து கடந்த ஜூன் மாதம் முதல் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்தது. அதன் படி தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அவ்வப்போது சில தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது.

அவ்வகையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் திறக்கப்படும் என்று நூலகத்துறை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, கன்னிமாரா, அண்ணா நூற்றாண்டு நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், முழுநேர கிளை நூலகங்கள் என அனைத்து நூலகங்களையும் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது இந்த நூலகங்களில் புத்தகங்களைப் பெறுவது, குறிப்புகளை எடுப்பது, புத்தகங்களை எடுத்து வந்து படிப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

மேலும் 65 வயதிற்குள் இருப்பவர்கள் மட்டும் தான் அனுமதி என்றும், காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே நூலகங்கள் திறக்கப்படும் என்றும், நூலக பணியாளர்கள் தான் வாசகர்கள் கேட்கும் புத்தகத்தை எடுத்து கொடுக்க வேண்டும் என்றும், நூலகர்கள் மற்றும் நூலக பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் மற்றும் கையுறை கட்டாயமாக அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

error: Content is protected !!