தரமிறங்கிக் கொண்டே போகும் தமிழக தேர்தல் பரப்புரைப் போக்கு!- வீடியோ

தரமிறங்கிக் கொண்டே போகும் தமிழக தேர்தல் பரப்புரைப் போக்கு!- வீடியோ

மிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, அ.ம.மு.க. கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 5 முனைப்போட்டி காணப்படுகிறது. இதை ஒட்டி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பலர் பரப்புரை செய்து வரும் சூழலில் அண்மை காலமாக கொச்சையாக பல நட்சத்திரப் பேச்சளர்கள் ஆபாசமாக பேசும் போக்கு அதிகரித்துள்ளது.

இப்படித்தான் தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பின் நிறுவனா் கி.வீரலட்சுமி. இவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பல்லாவரம் சட்டப் பேரவை தொகுதியில் மை இந்தியா பார்ட்டி என்ற கட்சி சார்பில் வேட்பாளராக கி.வீரலட்சுமி போட்டியிடுகிறார். இவர் அந்த தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் பம்மலில் தேர்தல் பிரச்சாரத்தில் வீரலட்சுமி ஈடுபட்டிருந்த போது, தெரியாத ஒரு எண்ணில் இருந்து ஆபாச வீடியோ அவரது வாட்ஸ் அப்க்கு வந்துள்ளது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இவர் இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்திருக்கிறார்.. அது போக திண்டுக்கல் லியோனி பெண்களையும், கரவை மாட்டையும் ஒப்பிட்டு பேசி முகம் சுளிக்க வைத்தார்

இதை எல்லாம் மிஞ்சும் வகையில் அண்மையில், ஆயிரம் விளக்கு தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் எழிலனை ஆதரித்து நேற்றுமுன்தினமும், பெரம்பலுார் மாவட்டம், குன்னம் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் சிவங்கரனை ஆதரித்து நேற்றும், ஆ.ராசா பேசிய போது, “இந்த சட்டமன்ற தேர்தலில், ‘௧௦ ஆண்டு இருட்டுக்கு பின், விடியல் வேண்டும். கருணாநிதி ஆட்சி வர, ஸ்டாலின் முதல்வராக வேண்டும்’ என்கிறோம். இ.பி.எஸ்.,சோ, ’10 ஆண்டு நல்லாட்சி தொடர, எனக்கு ஓட்டளியுங்கள்’ என்கிறார். இருவரையும் எடை போட்டு பார்ப்போம். ஜனநாயகத்தை காப்பாற்ற, சிறையில் இருந்தவர் ஸ்டாலின். கட்சியில் மாவட்ட பிரதிநிதி,பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என, படிப்படியாக உயர்ந்து, தலைவரானார். ஆட்சி நிர்வாகத்திலும், எம்.எல்.ஏ., மேயர், உள்ளாட்சி துறை அமைச்சர், துணை முதல்வர் என உயர்ந்தார். இப்போது முதல்வராகப் போகிறார். அவர் திணிக்கப்பட்டவர் அல்ல. முறைப்படி பெண் பார்த்து நிச்சயம் செய்து, திருமணம் நடத்தி, சாந்தி முகூர்த்தம் நடத்தி, 300 நாட்கள் கழித்து, சுகப் பிரசவத்தில் பிறந்தவர் ஸ்டாலின்.

ஆனால், ஜெயலலிதா இறக்கும் வரை, இ.பி.எஸ்.,சை யாருக்கும் தெரியாது. இவர், ஊர்ந்து போய் முதல்வரானார். அதிகாரத்தில் இருப்பதால், அவருக்கு புகழ். ஓராண்டாக கொடுத்தவிளம்பரத்தால், அதில் கிடைத்த லாபத்தால், பத்திரிகைகள், அவரை மிகப் பெரிய தலைவர் போல சித்தரிக்கின்றன. இ.பி.எஸ்.,சுக்கு என்ன தகுதி, தியாகம் இருக்கிறது; பொது வாழ்வில், அவர் எட்டியிருக்கிற தொலைவு என்ன; ஒன்றும் கிடையாது.நல்ல உறவில், ஆரோக்கியமாக சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின்; கள்ள உறவில் பிறந்த குறை பிரசவம், இ.பி.எஸ்.,. ” என்று சொன்னது பலத்த சர்ச்சையை கிளப்பியது.

இதனிடையே பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இன்பசேகரனை ஆதரித்து காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை மற்றும் அவரது மருமகன் மனோஜ் ஆகியோர் அப்பகுதி பெண்களிடம் வாக்கு சேகரித்தனர். அப்போது பேசிய குருவின் மகள், “ராமதாஸ் வன்னிய சமுதாயக்கு எதுவுமே செய்ததில்லை.. ரத்தத்தை அட்டைப்பூச்சி மாதிரி உறிவார். எனது அப்பா 20 வருசம் வன்னியர் சங்கத்தில் இருந்தார். அவரை மருத்துவக் கொலை செய்து விட்டார்கள். எனது அப்பா 48 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது அந்த 48 நாட்களும் மயக்க ஊசி செலுத்தியே வைத்திருந்தனர். இதனால் தான் எனது அப்பா இறந்துவிட்டார். அவரை வேறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்கிறோம் என கூறினோம். இதற்கு ராமதாஸின் ஆட்கள் வேறு எங்குள் அழைத்து செல்ல கூடாது என மிரட்டினர்கள்.. ஆனால் பின்னாடி அவருக்கு சிலை, மணி மண்டபம் அது இது -ன்னு எதையோ சொல்லி ஏமாத்தறாங்க.. எல்லாம் அரசியல் ஸ்டண்ட்தானே என்று குருவின் மகள் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் அவர் பேசுகையில், ‘அன்புமணியும், ராமதாசும் ஒட்டுமொத்த அரசியலை விட்டு அகற்ற வேண்டும். வன்னியர் சங்கத்திற்கும், அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதைப்பற்றி கூறுவதற்கு அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை. இன்னமும் இருந்தால் அவர் வன்னிய மக்களை அழித்து விட்டுத்தான் போவார். இடஒதுக்கிடுக்காக போராடிய 28 பேரை சுட்டுகொன்ற அதிமுக அரசுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது. நம் மக்களை முட்டாளா நெனக்கற கூட்டத்தை ஓட ஓட விரட்டுங்க’என்று குருவின் மகள் தெரிவித்தார்.

error: Content is protected !!