October 17, 2021

தமிழகத்தில் ஆர்.கே. நகர் உள்பட 19 தொகுதிகளுக்கு தேர்தல்?

தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அந்த தொகுதிகள் வெற்றிடம் என அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.இதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் உள்பட 19 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம்  தமிழக அரசியலில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு அரசியல் நிகழ்வுகள் நடந்து வருகிறது. முக்கியமாக அதிமுகவில் அடுத்தடுத்து குழப்பம் மற்றும் மாற்றம்  நடந்த வண்ணம் உள்ளது . அதிமுக அணி இரண்டாகி பின்னர் மூன்றாகி அதன் பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்ததன் பின்னர் அதிமுக அணி , தினகரன் அணி என செயல்பட்டு வருகிறது.

இதனிடையே  எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என தினகரன் அணியினர் 19 பேர் மனு கொடுத்த நிலையில் அவர்களிடம் சட்டப்பேரவை தலைவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் 19 பேரும் விளக்கம் அளிக்க வராத நிலையில் திடீரென இன்று காலை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

அவரது அறிவிப்பில் இந்திய அரசமைப்புச்சட்டம் 10 வது அட்டவணையின் படி ஏற்படுத்தப்பட்டுள்ள 1986 ஆம் ஆண்டு சட்டபேரவை விதிகளின் படி (கட்சி மாறுதல் காரணம் காட்டி தகுதியின்மையாக்குதல்) விதிகளின் கீழ் சட்டப்பேரவை தலைவர் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்து ஆணையிட்டதன் காரணமாக தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்து விட்டார்கள். இவ்வாறு சட்டப்பேரவை தலைவர் அறிவித்துள்ளார்.

அதன் படி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள்:

1.தங்க தமிழ்செல்வன்,2.ஆர்முருகன், 3.மாரியப்பன் கென்னடி, 4.கதிர்காமு, 5.ஜெயந்தி பத்மநாபன், 6.பழனியப்பன், 7.செந்தில் பாலாஜி, 8.வெற்றிவேல், 9.எஸ்.முத்தையா, 10.என்.ஜி.பார்த்திபன், 11.கோதண்டபாணி, 12.பாலசுப்ரமணி, 13.ஏழுமலை, 14.ரங்கசாமி, 15.தங்கதுரை, 16.எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்ரமணி, 17.ஆர்.சுந்தர்ராஜ், 18.கே.உமா மகேஷ்வரி ஆகியோர் ஆவர்.

இந்நிலையில்  இந்த உத்தரவு உடனடி யாக அமல்படுத்தப்பட்டுள்ளது.18 எம்எல்ஏக்களுக்கு ஒதுக்கப்பட் டுள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதி அறைகளை காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் கூறுகையில், தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையை காலி செய்து விட்டதாக தெரிவித்தார்.

மேலும் 18 தொகுதிகளும் வெற்றிடம் என்று அறிவிப்பதற்கான நடவடிக் கையும் தொடங்கிவிட்டது. அது தொடர்பான விவரங்களை சட்டசபை செயலகம் சேகரித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் பணியை துவக்கி இருப்பதாக கூறப்படுகிறது. சபாநாயகர் பரிந்துரையை ஏற்று தலைமை தேர்தல் ஆணையம் இந்த 18 தொகுதிகளும் வெற்றிடம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 18 தொகுதிகளுடன் ஏற்கனவே காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியையும் சேர்த்த தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த தேர்தலை சந்திப்பதற்கு ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.குறிப்பிடப்பட்டுள்ளதாககூறப்படுகிறது.அதனால், 18 பேரும், வரும், 20ல், விளக்கம் அளிக்கவில்லை என்றால், அவர்களை, எம்.எல்.ஏ.,க்களாக தேர்வு செய்ததை ரத்து செய்ய வாய்ப்புள்ளது.இந்த நடவடிக்கை வாயிலாக, ஆட்சியை தக்க வைக்கவும், முதல்வர் பழனிசாமி திட்டமிட்டு உள்ளாக கூறப்படுகிறது.

மேலும், 18 தொகுதிகளுடன், ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள, ஆர்.கே.நகரையும் சேர்த்து, 19 தொகுதிகளுக்கும், ஆறு மாதங்களில் இடைத் தேர்தல் நடத்தும்படி, தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொள்வது குறித்து, சட்ட நிபுணர்களுடன், முதல்வர் ஆலோசனை நடத்தியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.