Exclusive

தமிழ்நாடு பட்ஜெட் : மார்ச் 20ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல்!

டப்பு 2023-24-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் 20-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் யார் யாரை எங்கு உட்கார வைக்க வேண்டும் என்பது சபாநாயகரின் உரிமை. கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவெடுக்கும் என்றும் கூறினார்.

சென்னையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பட்ஜெட் தாக்கல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மார்ச் 20 ஆம் தேதி தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்வார் என்று தெரிவித்தார். சட்டமன்றத்தில் யார், யாரை எங்கே உட்கார வைப்பது என்பது என்னுடைய முடிவு என்று கூறிய அவர், அதிமுக எதிர்க்கட்சித் தலைவருக்கான இருக்கை விவகாரமானது ஏற்கனவே எடுத்த முடிவு தான் என்று தெரிவித்தார்.

வேளாண் நிதிநிலை அறிக்கை மற்றும் மானிய கோரிக்கைகள் குறித்து மார்ச் 20ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும் என்றும், ஆளுநர் உரையின் போது பேரவை மாடத்தில் அமர்ந்து செல்போன் வாயிலாக வீடியோ எடுத்த விவகாரம் குறித்து உரிமைக் குழு முடிவெடுக்கும் என்றும் அப்பாவு தெரிவித்தார். தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 9ம் தேதி கூட உள்ளதும், இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதி நிலை அறிக்கைகளுக்கு ஒப்புதல், டைடல் பூங்கா, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

aanthai

Recent Posts

‘சூரி’யை சுத்தமா ஓரம் கட்டி வச்சிட்டு ‘குமரேசனா’ மாறிட்டேன்- விடுதலை அனுபவம்!

“அடுத்தடுத்து வரும் படங்களில், சின்ன வேடத்தில் நடித்தால்கூட போதும் என நினைத்திருக்கிறேன். ஆனால் இப்போது நானே ஹீரோ என்று வந்திருக்கும்…

8 hours ago

ஜிவி பிரகாஷ் இசையில் பாரதிராஜாவை இயக்கும் மனோஜ் பாரதிராஜா!

டைரக்டர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.…

12 hours ago

’பத்து தல’ பட பத்திரிக்கையாளர்கள் சந்திப்புத் துளிகள்!

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய ‘பத்துதல’ திரைப்படம்…

16 hours ago

ராகுல் எம்.பி. பதவி பறிபோனதற்கான அடிப்படை காரணம் என்ன தெரியுமா?

இரண்டு நாட்கள் முன் வரை எம்பியாக இருந்த ராகுல் காந்தி, தற்போது தனது அந்த பதவியை இழந்து நிற்கிறார். அவரது…

20 hours ago

டிஎன்பிஎஸ்சி : குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியாகிடுச்சு!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) ற்கான எழுத்துத் தேர்வினை தேர்வாணையம் கடந்த…

1 day ago

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய் – ஐஷ்வர்யா ராஜேஷ் – ஷிவதா இணையும் ‘தீராக் காதல்’!

நடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'தீராக் காதல்' என பெயரிடப்பட்டு,…

1 day ago

This website uses cookies.