வங்கிகளின் சேவை நேரம் குறைப்பு : காலை 10 முதல் 2 மணிவரை இயங்கும்!

வங்கிகளின் சேவை நேரம் குறைப்பு : காலை 10 முதல் 2 மணிவரை இயங்கும்!

மிழகத்தில் நாளை ஏப்ரல் 26ம் தேதியிலிருந்து ஏப்ரல் 30 வரை வங்கி சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. வங்கி சேவை நேரம் காலை 10:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை என தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.

இந்தியாவெங்கும்ன் கொரோனா இரண்டாவது அலை தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை தடுக்க தமிழ்நாடு முழுவதும் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, தியேட்டர், பார்க், கேளிக்கை விடுதிகள் இயங்குவதற்கு தடை என சில கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந் நிலையில் தமிழ்நாட்டில் நாளை முதல் (ஏப்ரல் 26) வாடிக்கையாளர்களுக்கான வங்கி சேவை நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில வங்கியாளர்கள் குழுமம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மாநிலத்தில் செயல்படும் வங்கிகள் அனைத்தும் காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே செயல்படும். அதேவேளை, மக்களுடன் நேரடி தொடர்பில் இல்லாத ஊழியர்கள் அனைவரும் வழக்கமான முறைப்படி பணியாற்றுவார்கள். ஆதார் – வங்கி கணக்கு இணைக்கும் மையம் ரத்து செய்யப்படுகிறது. கட்டுப்பாடு மண்டலங்களுக்குள்ளே செயல்படும் வங்கிகள் பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்றவேண்டும்; வங்கிகளின் வணிகத்தொடர்பாளர் (Business Correspondents) வழக்கம்போல் பணிபுரிய வேண்டும்; வங்கி ஏடிஎம்/ சிடிஎம் உள்ளிட்டவைகள் வழக்கம்போல் இயங்கும்” என்று தெரிவிக்கப்பட்டது.
.

error: Content is protected !!