October 16, 2021

‘இலங்கை எம்.பி.க்களுக்கு தமிழ் கட்டாயம் தெரிஞ்சிருக்கணும்!

உலகில் காலத்தால் மூத்த மொழிகள் பல உள்ளன. அவற்றுள் தமிழ், சமஸ்கிருதம், இலத்தீன் முதலியன சிலவாகும். சமஸ்கிரு தமும், இலத்தீனும் இன்று பேச்சு வழக்கில் இல்லை. ஆனால் தமிழ் மொழி பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் இருந்து வருகின்றது. தமிழ் மொழி தான் பிறந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியும் இளமையும் எழிலும் குன்றாமல் இருந்து வருகின்றது.

srilanga feb 21

தமிழ் மொழி ஆரம்பத்தில் இந்திய துணை கண்டத்தின் தென் பகுதியில் வாழ்ந்த மக்களிடையே வழங்கி வந்தது. தமிழ் மொழியை பேசிய இனத்தோர் தமிழர் எனப்பட்டனர். தமிழ் மொழி வழங்கிய தேசம் தமிழகம், தமிழ் நாடு, திராவிடம் என பல பெயர்களால் அழைக்கப்பட்டது. தமிழ் நாட்டை பண்டைய நாளில் சேர சோழ பாண்டியர் எனும் மூவேந்தர் ஆட்சி புரிந்தனர். இவர்கள் தமிழ் மொழியை வளர்ப்பதில் அரும்பாடுபட்டனர். தமிழ் மொழியை கற்று உணர்ந்த புலவர்களை பொன்னும் பொருளும் தந்து வாழ்த்தினர்.

தமிழ் நாட்டில் அன்று பிறந்து வளர்ந்த தமிழ் இன்று மலேசியா, சிங்கபூர், இலங்தமிழ் மொழி இயல், இசை, நாடகம் எனும் முப்பெரும் பிரிவுகளை கொண்ட தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் தெரிந்து இருக்க வேண்டும் என்பது சட்டப்படி கட்டாயமாக்கப்படும் என்று இலங்கை மொழிகள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கை மொழிகள் துறை அமைச்சர் மனோ கணேசன் இது குறித்து, “எம்.பி.க்களுக்கு இரு மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். அதாவது சிங்களத்தை தவிர தமிழ் மொழியையும் அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தற்போது உள்ள பெரும்பான்மையான உறுப்பினர்களுக்கு ஒரு மொழி மட்டுமே தெரியும் என்பதால் அனைத்து சமுதாய மக்களின் பிரச்னைகளையும் புரிந்து கொள்வதில் அவர்களுக்கு சங்கடம் உள்ளது. எனவே அவர்கள் இரு மொழிகளையும் தெரிந்திருப்பது அவசியம் என்பது சட்டரீதியாக கட்டாயமக்கப்படும்.”இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, மின்சாரம், நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளில் இந்திய-இலங்கை இடையிலான உறவை ஆய்வு செய்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை செயலர் எஸ்.ஜெய்சங்கர் கடந்த சனிக்கிழமையன்று இலங்கை சென்றார். அவர் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். அதன்பிறகு இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவை சந்தித்து பேசினார். அப்போது, தமிழர்களுக்கு சமஉரிமை அளிப்பதற்காக இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.