”தமிழ் சினிமா நன்றாக உள்ளது -ஆனால் தமிழ் திரைப்பட துறை நன்றாக இல்லை”! – ஆர் கே செல்வமணி அப்செட்

அம்மா கிரியேஷன்ஸ் T.சிவாவின் வெள்ளி விழா வருட திரைப்படம் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் . இத்திரைப்படத்தின் டபுள் பாசிடிவ் காட்சியை பார்த்த 1௦வது நிமிடத்தில் இப்படத்தின் வியாபாரம் முடிந்தது. படத்தை தமிழகமெங்கும் ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் கே. சிதம்பரம் வெளியிடுகிறார் – படம் பார்த்து 10வது நிமிடத்தில் படத்தின் மொத்த வியாபாரமும் முடிந்துள்ளது சமீபத்தில் இதுவே முதன் முறை. இதன் இசை வெளியீட்டு விழாவில் ஹீரோ அதர்வா முரளி , சூரி , ரெஜினா கசன்றா , அதீதி போஹன்கர் , இசைய மைப்பாளர் டி.இமான் , இயக்குநர் ஓடம் இளவரசு , பிக்பிரிண்ட் கார்த்தி , 2எம்.பி ரகு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  விழாவில் FEFSI தலைவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேசிய போது, “இப்படத்துக்கு ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற மிகச்சிறப்பான தலைப்பு தமிழில் உள்ளது அதை GGSR என்று ஆங்கிலத்தில் அழைப்பது தவறாகும். வரிவிதிப்புக்காக தமிழில் பெயர் வைக்கக்கூடாது. தமிழ் மேல் பற்றோடு நாம் தமிழில் தலைப்பு வைக்க வேண்டும்.தமிழ் நிலைத்து இருக்கவேண்டும் என்றால் எல்லோரும் தமிழில் பெயர் வைக்க வேண்டும். தயாரிப்பாளர் சிவா எனக்கு அழைப்பிதழ் வைக்க வந்திருந்தபோது அந்த அழைப்பிதழை பார்த்த நான் இசையமைப்பாளர் இமானுக்கு சம்பளமே கொடுக்க வேண்டாம். அப்படி கொடுத்திருந்தால் திருப்பி வாங்கி விடுங்கள் என்றேன் . ஏனென்றால் நான்கு கதாநாயகிகளோடு சேர்ந்து அவர் இருக்கும் புகைப்படத்தை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருந்தது அதனால் தான் .படத்தின் பாடலை கேட்டவுடன் அவருக்கு மேலும் நிறைய சம்பளம் கொடுக்கலாம் என்று எனக்கு தோன்றியது. முக்கியமாக வெண்ணிலா தங்கச்சி பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

எனக்கு முதல் படம் கிடைக்க காரணமாக இருந்தவர் அம்மா க்ரியேஷன் சிவா தான்.அவர் தான் தயாரிப்பாளர் ராவூதரிடம் பேசி எனக்கு முதல் பட வாய்ப்பை வாங்கி தந்தார். அந்த படத்தை இடையில் வேறொரு இயக்குநரிடம் போனது . அந்த சமயத்திலும் தயாரிப்பாளர் ராவூத்தரிடம் பேசி மீண்டும் எனக்கு முதல் பட வாய்ப்பை வாங்கி தந்தவர் சிவா அவருக்கு நான் எப்போதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்றார் ஆர்.கே.செல்வமணி. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது கே. சிதம்பரம் சார் உங்களுக்கு பணம் கொடுத்தார் என்பதால். சிதம்பரம் சாருக்கு மன்னார் பணம் கொடுக்க வேண்டும் , மன்னாருக்கு அபிராமி ராமநாதன் சார் பணம் கொடுக்க வேண்டும். அபிராமி சாருக்கு மக்கள் பணம் கொடுக்க வேண்டும். இந்த சுழற்சி நன்றாக இருந்தால் தான் சினிமா நன்றாக இருக்கும். அந்த சுழற்சியை நன்றாக கொண்டு வரும் அமைப்பாக நீங்கள் அனைவரும் இங்கு இருக்கிறீர்கள். அதை நீங்கள் எல்லோரும் சரியாக செய்ய வேண்டும்.தயாரிப்பாளருக்கு போட்ட முதல் ஒரு படத்தில் வரவில்லை என்றால் அடுத்த படம் எடுப்பது கஷ்டமான ஒன்றாக உள்ளது. அதை சரியாக பண்ண வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவருக்கும் இருக்கிறோம் என்பதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் 25% தயாரிப்பு செலவை குறைத்துள்ளோம் நாங்கள். இது தயாரிப்பாளர்களுக்கு நாங்கள் செய்துள்ள சேவை. நாம் அனைவரும் சண்டை போட்டால் கூட சினிமாவை காப்பாற்ற முடியாத நிலைமையில் நாம் இப்போது இருக்கிறோம். எல்லோரும் ஒன்றாக இருக்கும் போதே சினிமாவை காப்பாற்ற முடியவில்லை. இப்போது எல்லோருக்கும் பல கருத்து உள்ளது.தயாரிப்பாளருக்கு வருமானம் வரக்கூடிய வாசல் எல்லாம் அடைத்துவிட்டது. தியேட்டரில் மட்டும் தான் இப்போது வருமானம் வருகிறது.நான் ஒரு தியேட்டரில் படம் பார்க்க சென்றேன் . 120 ருபாய் படத்தின் டிக்கெட் ஆன்லைனில் என்னிடம் 180 ரூபாய் கலெக்ட் செய்கிறார்கள். மொத்தம் நான்கு டிக்கெட் புக் செய்தேன் என்னிடம் 600 ரூபாய் வாங்கினார்கள். நான் என்னுடைய குழந்தைகளுடன் படத்துக்கு சென்றேன் மொத்தம் 1200 ரூபாய் கேன்டீன் சார்ஜெஸ் வந்தது. படம் முடித்து வந்த பிறகு பார்க்கிங்கில் 160 ருபாய் வாங்கினார்கள்.மொத்தமாக 2400 ரூபாய் ஒரு படம் பார்க்க செலவாகிறது. ஆனால் தயாரிப்பாளர்களுக்கு வெறும் 240 ரூபாய் தான் லாபமாக வரும். அனைத்து வர்த்தக சபைகளையும் ஒன்றாக இருந்து இதை சரி செய்ய வேண்டும். தமிழ் சினிமா நன்றாக உள்ளது. ஆனால் தமிழ் திரைப்பட துறை நன்றாக இல்லை.தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் தமிழ் சினிமா நன்றாக இருக்கும் என்றார் ஆர்.கே.செல்வமணி
இந்த ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் இசை வெளியீட்டு விழாவுக்கு இடையே இயக்குநர் வெங்கட் பிரபுவின் பார்ட்டி திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிட்டு விழாவும் நடந்தது இதில் இயக்குநர் வெங்கட் பிரபு , படத்துக்கு இசையமைக்கும் சத்யா ராஜ் , ரம்யா கிருஷ்ணன் , சிவா , கயல் சந்திரன் , ரெஜினா கசன்றா , நிவேதா பெத்துராஜ் ,சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.