செல்ஃபோன், டி.வி பார்க்கும் அடிமைத் தனத்தால் அதிகரிக்கும் ஆபத்துகள்!

பரபரப்பாக டூ விலரில் போய் கொண்டிருக்கும் போது கூட சிக்னலில் கிடைக்கும் சில நொடிகளில் கூட, போனை எடுத்து ஜஸ்ட் நோண்டுவீருகளின் எண்ணிக்கையும், ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் சிங் போல, காலியான மெயில் பாக்ஸை திறந்து திறந்து பார்ப்போரின் எண்ணிக்கையும் ஃபேஸ்புக்கில் போட்ட ஒரு படத்திற்கு லைக் அதிகம் இல்லையே என இன்னும் ரெண்டு ஹேஷ் டேக் சேர்ப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் சூழலில் அதிகமாக டிவி, செல்போன் திரையில் செலவிடும், குழந்தைகள், இளைஞர்கள் அதிமாக உணர்ச்சி வசப்படுவார்கள் என்று ஆய்வு கூறுகிறது.

ஆரோக்கியமான வாழ்வு மற்றும் உடல் பருமன் காரணங்களை குறித்து ஆராய்ச்சி செய்யும் குழு இந்த ஆய்வை நடத்தி வெளியிட்டுள்ளது. அதில் 4,524 குழந்தைகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி உள்ளது. அதில் அவர்கள் அதிக உணர்ச்சிவசப்படும் குழந்தைகளாக இருப்பது கண்டறியப்பட்டது. ஆராய்ந்தபோது ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் திரைகள் பார்ப்பதுதான் காரணம் என்பது கண்டறியப்பட்டது. இந்த பிரச்னை அவர்களுக்கு பலவகையான மன ஆரோக்கியச் சிதை வையும் உண்டாக்குவதாக வும் ஆய்வு தெளிவுப்படுத்துகிறது.

அதுமட்டுமன்றி உணவை சரியாக உட்கொள்ளாமை, செல்ஃபோன், டி.வி பார்க்கும் அடிமைத் தனத்தால் நடந்துகொள்ளும் செயல்கள் போன்றவையும் உந்துதல் காரணங்களாக இருக்கின்றன. மேலும், இளைஞர்கள், குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 9 – 11 மணி நேரம் தூக்கம் அவசியம் என்றும் , 2 மணி நேரத்திற்கு மேல் டிவி, செல்போன் பார்த்தலை தவிர்த்தல் நல்லது என்றும் ஆய்வு குழு பரிந்துரைக்கிறது