பாலியல் வன்க்டுமை செய்வோரை உடனடியா தூக்கில் போடக் கோரி உண்ணாவிரதம்!

பாரம்பரியமும், ஏகப்பட்ட்ட ஜனத்தொகைகளும் நிறைந்த ஐதராபாத் மற்றும் ராஜஸ்தானில் சமீபத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால் ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

நவம்பர் மாதம் ஐதராபாத்தில் கால்நடை மருத்துவரான இளம் பெண் பிரியங்கா ரெட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அதேபோல் ராஜஸ்தானில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்த டில்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் சமீபத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களை சுட்டிக்காட்டி இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பாலியல் குற்றவாளிகளை குற்றம் நிரூபிக்கப் பட்ட 6 மாதங்களில் தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் தன் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இன்று காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை சுவாதி மாலிவால் துவங்கியுள்ளார்.

ஜந்தர் மந்தரில் செய்தியாளர்களிடம் சுவாதி மாலிவால் பேசுகையில், “ பெண்கள், குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களை தூக்கிலிட வேண்டும். ஐதராபா த் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். கடந்த ஆண்டும் இதேபோல் இதே கோரிக்கைகளுக்காக நான் போராட்டத்தில் ஈடுபட்டேன். போராட்டத்தில் ஈடுபட்ட 10 நாட்களில் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை 6 மாதங்களில் தூக்கிலிட சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அது முறையாக அமல்படுத்தப்படவில்லை.

தற்போது பிரதமர் மோடி அந்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு விரைவாக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அதற்கேற்றவாறு உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். டெல்லியில் 66,000 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 45 விரைவு நீதிமன்றங்கள் பற்றாக்குறையாக உள்ளது”என சுவாதி மாலிவால் தெரிவித்தார்.

மேலும் தன்னை ஜந்தர் மந்தரில் போராட போலீசார் அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை டில்லி போலீசார் மறுத்துள்ளனர்.

இதனிடையே 27 வயது இளம் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நீதி வழங்கப்பட வேண்டும் என்று கோரும் மனுக்களில் இதுவரை 15 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

சேஞ்ச். ஆர்க் (change.org) என்ற இணையத்தளத்தில் நவம்பர் 29ம் தேதி வெளியான மனுவில் 24 மணி நேரத்தில் 3 லட்சம் பேர் கையெழுத்திட்டனர். இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

மக்கள் தங்கள் கோபத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்யும் வகையில் கடந்த 4 நாட்களில் இதுபோன்ற 500க்கும் மேற்பட்ட மனுக்களை துவங்கியுள்ளனர். இதில் அதிகபட்சமாக மும்பையை சேர்ந்த கால்நடை மருத்துவரான டாக்டர் சாந்தனு கோடாபேவின் மனுவில் 8 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர் என்று சேஞ்ச். ஆர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.