August 20, 2022

தூய்மை நகரங்கள் பட்டியல் வெளியாயிடுச்சு! – உங்க ஊர் இடம் பெற்றுள்ளதா?

மத்திய அரசின், ஸ்வாச் சர்வேஸ்கான் எனப்படும், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நாட்டின் பல பகுதிகளில்தூ ய்மையான நகரங்கள் குறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 434 நகரங்களில் ஆய்வு நடந்தது. ஆய்வு முடிவுகளை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி வெங்கையா நாயுடு இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார்.

clena may 4

ஒவ்வொரு வருடமும் நகரங்களில் அமைந்துள்ள கட்டுமான வளர்ச்சி, சுத்தம், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து ஆகியவற்றின் அடிப்படையில், நடைபெறும் கணக்கெடுப்பினை இந்திய தரக் குழு இந்தியாவின் 434 நகரங்களில் 17,500 இடங்களில் இந்த சோதனைகளை 421 மதிப்பீட்டாளர்களைக் கொண்டு நடத்தியது. மேலும் இந்த கணக்கெடுப்பினை 55-பேர் அன்றாட அடிப்படையில் கண்காணித்தனர். இதில் முதல் மூன்று இடங்கள் இந்தூர், போபால், விசாகப்பட்டிணம் ஆகிய நகரங்களுக்கு கிடைத்துள்ளது. சென்ற வருடம் வெளியிடப்பட்ட பட்டியலில் திருச்சிக்கு 3-ஆம் இடம் கிடைத்தது. இந்த நிலையில் இந்த வருடம் திருச்சி மூன்று இடங்கள் பின் தங்கி 6-ம் இடம் பெற்றுள்ளது.

’தூய்மை இந்தியா 2017’ இடப்பெற்றுள்ள நகரங்களின் விவரம்:

1 இந்தூர்

2 போபால்

3 விசாகப்பட்டிணம்

4 சூரத்

5. மைசூர்

6. திருச்சி

7. புதுடெல்லி

8. நவிமும்பை

9. திருப்பதி

10.வதோதரா

இப்பட்டியலில வெளியிடப்பட்ட முதல் 50 இடங்களில் அதிகபட்சமாக குஜராத்தின் 12 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. குஜராத்துக்கு அடுத்து 11 நகரங்களுடன் மத்திய பிரதேசமும், 8 நகரங்களுடன் ஆந்திராவும் உள்ளனர். தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா முறையே 4 நகரங்கள் இடப்பெற்றுள்ளன.

தூய்மையான நகரங்களின் பட்டியலில் இடப்பெற்றுள்ள தமிழக நகரங்கள்:

தூய்மைக் கணக்கெடுப்பு பட்டியலில் முதல் 50 இடத்தை பிடித்துள்ள நகரங்களில் நான்கு நகரங்கள் தமிழ் நாட்டை இந்தப் பட்டியலில் திருச்சி 6-வது இடத்திலும், கோயம்புத்தூர் 16-வது இடத்திலும், கும்பகோணம் 37-வது இடத்திலும், ஈரோடு 42-வது இடத்திலும் உள்ளன.

தலைநகர் சென்னைக்கு 235-வது இடம்

இப்பட்டியலில் இடப்பெற்றுள்ள தமிழகத்தின் பிற நகரங்களின் பட்டியல் விவரம்: மதுரை – 57, தாம்பரம் – 62, திருப்பூர் – 68, ஓசூர் – 82, வேளாங்கண்ணி – 84, திண்டுக்கல் – 106, வேலூர் – 108, காரைக்குடி – 110, புதுக்கோட்டை – 113, ராஜபாளையம் – 125, காஞ்சீபுரம் – 127, சேலம் – 135, பல்லாவரம் – 155, ஆவடி – 169, நாகர்கோவில் – 174, நாகப்பட்டினம் – 185, திருநெல்வேலி – 193, தஞ்சாவூர் – 198, தூத்துக்குடி – 223, பெருநகர் சென்னை – 235, திருவண்ணாமலை – 238, கடலூர் – 250, ஆம்பூர் – 267, ராமேஸ்வரம் – 268. ஆகிய நகரங்கள் இடப்பெற்றுள்ளன.