தெரசாவுக்கு “புனிதர்’ பட்டமளிக்கும் விழா: சுஷ்மா தலைமையில் இந்தியக் குழு பங்கேற்பு

தெரசாவுக்கு “புனிதர்’ பட்டமளிக்கும் விழா: சுஷ்மா தலைமையில் இந்தியக் குழு பங்கேற்பு

மாசிடோனியா குடியரசு நாட்டில் பிறந்த அன்னை தெரசா இந்தியாவில் குடியேறி, மதத் தொண்டுடன் மனித சமூகத்துக்கும் தொண்டாற்றினார். கொல்கத்தாவில் அவர் உருவாக்கிய அமைப்பு சார்பில் தொழுநோயாளிகள் உள்பட பலருக்கும் சிகிச்சையும் உதவிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 1997இல் காலமான அன்னை தெரசாவுக்கு, மறைவுக்குப் பின், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

therasa jy 29

இந்நிலையில், தெரசாவை புனிதர் பட்டத்துக்குத் தேர்வு செய்திருப்பதாக உலகெங்கும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமைப் பீடமான வாடிகன் கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, வாடிகன் நகரில் வரும் செப்டம்பர் 4ஆம்தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அன்னை தெரசாவை “புனிதர்’ என்று போப் ஃபிரான்சிஸ் அறிவிக்க உள்ளார்.

இந்த விழாவில் இந்தியாவும் பங்கேற்க உள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், தில்லியில் வியாழக்கிழமை கூறியதாவது:

அன்னை தெரசா, புனிதர் என்று அறிவிக்கப்படுவதற்கு நாம் அளிக்கும் முக்கியத்துவத்தின் அடிப்படையில், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா தலைமையில் இந்தியக் குழுவினர் வாடிகன் செல்கின்றனர். அக்குழுவில் இடம்பெறும் பிரதிநிதிகள் யார் என்பது இறுதி செய்யப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக தில்லி மாநில அரசு அதிகாரி ஒருவர் புதன்கிழமை கூறுகையில், “தெரசாவின் தொண்டு நிறுவனம் விடுத்த அழைப்பை ஏற்று, புனிதர் பட்டத்துக்கான விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர்   கெஜ்ரிவால், வாடிகன் செல்ல உள்ளார்’ என்றார்.

அவருடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் வாடிகன் செல்வார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கெஜ்ரிரிவால் அரசியலில் ஈடுபடுவதற்கு முன் இந்திய வருவாய்ச் சேவை அதிகாரியாகப் பணியாற்றினார். அதற்கு முன், அவர் கொல்கத்தாவில் உள்ள தெரசாவின் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!