நம்ம இந்தியர்கள் இள வயதில் நல்லா சம்பாதிக்கறாங்க.. நிம்மதியா தூங்கி எழுந்திறாகிறாங்க!-ஆய்வு முடிவு!

நம்ம இந்தியர்கள் இள வயதில் நல்லா சம்பாதிக்கறாங்க.. நிம்மதியா தூங்கி எழுந்திறாகிறாங்க!-ஆய்வு முடிவு!

சர்வதேச அளவில் மலிவான (செலவு குறைந்த) நகரங்களில் இந்தியாவின் சென்னை, பெங்களூரு மற்றும் டெல்லி உள்ளிட்ட மெட்ரோ நகரங்களும் உள்ளன என்று பொருளாதாரப் புலனாய்வு நிறுவனத்தின் 2018ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை கூறியுள்ள நிலையில் இந்தியர்கள் நன்றாக சம்பாதிக்கிறார்கள்.அதிக சம்பளம் வாங்குகிறார்கள். அதனால் நன்றாகவே தூங்குகிறார்கள் என்று சமீபத்திய மற்றோரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியர்களின் தூக்கம் மற்றும் உடல்நலம் பற்றி சண்டேமேட்டரஸ்சஸ் என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது. ஒரு மனிதன் நிறைவான வாழ்க்கை வாழ்கிறான் என்பது அவன் எவ்வளவு நேரம் தூங்கு கிறான்? நன்றாக தூங்குகிறானா என்பதை பொறுத்தே அமையும் என்கிறார் இந்த ஆய்வு நடத்திய சண்டே மேட்டரஸ்சஸ் நிறுவனர் அல்போன்ஸ் ரெட்டி. தூக்கம் என்பது இயற்கை தந்த கொடை. ஆனால்இந்த நாகரிக உலகில் நள்ளிரவு வரை விழித்துக் கொண்டிருப்பது, கூடுதல் நேரம் பணியாற்றுவதன் மூலம் தரமான தூக்கத்தை இழந்து விடுகிறார்கள். தேர்வுக்காக தயாராகிற குழந்தைகளும் தூக்கத்தை தொலைத்து விடுகிறார்கள். நினைவாற்றல், திறமை, நீண்டகால உற்பத்தி காரணி, கடுமையான நோய்களில் இருந்து விடுபடவேண்டும் என்றால் நல்ல தூக்கம் என்பது இன்றியமையாதது என்கிறார் இந்த தூக்கவியல் துறை நிபுணர் டாக்டர் ஹிமன்சு கார்க்.

இந்த தூக்கத்தையொட்டி 25 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் டெல்லி, மும்பை, பெங்களூரு நகரங்களில் ஆய்வு- நடத்தப்பட்டது. இதில் கண்ட உண்மை என்னவென்றால், நன்றாக சம்பளம் வாங்குகிறவர்கள் நன்றாக தூங்கு கிறார்கள் என்று தெரிய வந்தது. அதாவது கைநிறைய சம்பாதிக்கிற போது, கவலை இல்லாமல் இருப்பதால், அதன் தாக்கமாக ஆழ்ந்த தூக்கத்தில் விழுகிறார்கள் என்று அந்த ஆய்வுகூறுகிறது.

ஆம்.. இந்த ஆய்வில் சுவையான பல தகவல்கள் வெளியாகி உள்ளன்.. 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் நன்றாக தூங்குவதாக கூறுகிறார்கள். 30 ஐ தாண்டிய வயதுடையவர்கள் தூக்கமே வரவில்லை என்கிறார்கள்.அவர்களுக்கு தூக்கம் சம்பந்தமான பிரச்னைகள் இரு மடங்கு உள்ளன. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இதே பிரச்னை. 3 தடவைக்கும் மேல் தூக்கம் தொடர்பான பிரச்னைகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இளம் வயதில் கை நிறைய சம்பாதிக்கிறவர்கள் தூக்கம் சம்பந்தமாக எந்தவித பிரச்னையும்இல்லை… வாரத்தில் இருநாட்கள் நன்றாக தூங்குவதாக கூறுகிறார்கள்.

மும்பைவாசிகள் அலாரம் வைத்தே எழுந்திருப்பதாக கூறுகிறார்கள். காரணம், அவர்கள் ஆந்தை போல இரவு 12மணி தாண்டியும் முழித்துக் கொண்டே இருப்பதுதான்.

பெங்களூரு வாசிகள் இரவு 10 முதல்11 மணிக்குள் தூங்கச்செல்கிறார்கள். காரணம், டெல்லி மற்றும் மும்பை போல பெங்களூரு நகரில் ஒலித் தொல்லைகள் அவ்வளவாக இல்லை என்பதுதான்.

அதே சமயம் படுக்கை அறையிலேயே லேப்டாப், செல்போன்களை வைத்துக்கொண்டே தூங்குகிறார்கள். டெல்லி மற்றும் பெங்களுரு, மும்பைவாசிகளிடம் இந்த பழக்கம்அதிகம். ஐ.டி.தலைநகர் என்றழைக்கப்படும் பெங்களூரு வாசிகளில் 97 சதவீதம் பேர் படுக்கை பக்கத்திலேயே செல்போன் வைத்துக்கொண்டே தூங்குகிறார்கள்.

குழந்தைகளோடு இருக்கிற தம்பதிகள், திருமணம் ஆகாதவர்கள் நன்றாக தூங்குகிறார்கள். குழந்தை இல்லா தம்பதி களுக்கு அந்த அளவுக்கு தூக்கம் இல்லை. அதே சமயத்தில் குழந்தைகளோடு தூங்குகிறவர்களுக்கு தூக்கம் சம்பந்தமான பிரச்னைகள் உள்ளன. இதனிடையே நன்றாக தூங்க வேண்டுமா?- பெற்றோர்களும் பிள்ளை களும்தனித்தனியாக படுப்பதே சாலச் சிறந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மேலும் தூக்கம் தொடர்பான பிரச்னைகளுக்கு தலையணைகளும் ஒரு காரணம். புதிய தலையணையில் தொடர்ந்து 3 ஆண்டு ளாக தூங்குகிறவர்களுக்கு தூக்கம் தொடர்பான பிரச்னைகள் 20 சதவீத அள-வுக்கே இருக்கும். பழைய தலையணைகளில் தூங்குகிறவர்களுக்கு இந்த பிரச்னைகள் அதிகம் காணப்படும். புகை பிடிப்பவர்களுக்கு 52 சதவீத அளவுக்கு இந்த பிரச்னைகளில் தவிப்பார்கள். சிகரெட் அதிகமாக புகைத்தால் பிரச்னைகளும் அதிகமாக இருக்கும். அதே போல குண்டு மனிதர்களுக்கும் தூக்கப் பிரச்னைகள் இருக்கும்.அன்றாடம் உடற்பயிற்சி, நடை பயிற்சிபோன்றவைகளில் ஈடுபட்டால் தூக்கப் பிரச்னைகள் குறைவு தான். தினமும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பயணத்திலேயே இருப்பவர்கள் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தூக்கம் தொடர்பான பிரச்னைகள் காணப்படும்.

 

Related Posts

error: Content is protected !!