July 31, 2021

தடுப்பூசி எல்லோருக்கும் இலவசமில்லையா? ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி

கொரோனா தடுப்பூசி கொள்கை தொடர்பாக தங்களிடம் உள்ள ஆவணங்களை மத்திய மாநில யூனியன் பிரதேச அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

நாடெங்கும் தீவிரமாக நடந்து வரும் கொரோனா சிகிச்சை, கொரோனா தடுப்பூசி தொடர்பாக அரசின் கொள்கை குறித்து சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து. இது குறித்த விசாரணையின் இறுதியில் 32 பக்க உத்தரவை இன்று பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவில் 18 வயது முதல் 44 வயது வரையிலான மக்களுக்கு கட்டண தடுப்பூசி போடுவது தொடர்பாக மத்திய அரசு நடைமுறைப்படுத்தும் கொள்கை தன்னிச்சையாகவும் அறிவுக்கு பொருந்தாமலும் உள்ளது என்று நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

இந்தத் தடூப்பூசி கொள்கையை மத்திய அரசு வெளியிடுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறைகளும் அமைச்சரவையை அளவிலும் மேற்கொள்ளப்பட்ட விவாதங்கள் அவற்றுக்கான கோப்புக்கள், கோப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.

குறிப்பாக முதல் கட்ட தடுப்பூசி இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், எத்தனை சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது என்ற விவரத்தை தெரிவிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த புள்ளி விவரத்தோடு கிராமப் பகுதியில் எத்தனை சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற விவரத்தையும், அவர்கள் கிராமப்பகுதி மக்கள் தொகையில் எத்தனை சதவீதமாக உள்ளனர் என்பதையும் தெரிவிக்க குறிப்பிட்டுள்ளது. அதேபோல நகரப்பகுதியில் எத்தனை சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது தடுப்பூசி போட பட்டவர்கள் நகரப் பகுதி மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் என்றும் தனித்தனியாக தெரிவிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதை எல்லாம் விட மத்திய அரசின் தடுப்பூசி கொள்முதல் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிவிக்கும்படி உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக இந்திய மக்கள் அனைவருக்கும் எப்பொழுது தடுப்பூசி போடப்படும் என்பதைத் தெரிவிக்கும்படி நீதிபதிகள் கேட்டனர். அப்பொழுது 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.இதை அடுத்தே இந்த இலக்கை அடைய மத்திய அரசு மேற்கொள்ள இருக்கின்ற குறிப்பான நடவடிக்கைகள் பற்றியும் குறிப்பிடும்படி சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு என்னவோ நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரானோ தடுப்பூசி போடுவதுதான் தனது கொள்கை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த லட்சியத்தை அடைய மத்திய, மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் என்ன நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள் என்பதை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் தனித்தனியாக மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் உச்ச நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தி இதற்கான ஆவணங்கள் அனைத்தையும் இரண்டு வார காலத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கூடவே கொரோனா தொடரைத் தொடர்ந்து இந்திய மக்கள் மத்தியில் பரவி வரும் கருப்பு பூஞ்சை நோய் குறித்தும் அதற்கான மருந்து பொருள்கள் இந்தியாவில் கிடைக்கின்றதா என்பது குறித்தும் மருந்து பொருட்கள் இந்திய மக்களுக்கு கிடைக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் பதிலளிக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது.