சிங்கூர் நிலைத்தை விவசாயிகளிடம் ரிட்டர்ன் செய்ய சுப்ரீம் கோர்ட் ஆர்டர்!

சிங்கூர் நிலைத்தை விவசாயிகளிடம் ரிட்டர்ன் செய்ய சுப்ரீம் கோர்ட் ஆர்டர்!

போன 2006-ம் ஆண்டு வெஸ்ட் பெங்கால் மாநிலத்தின் சிங்கூர் மாவட்டத்தில் நானோ கார் தொழிற்சாலை அமைக்க 1000 ஏக்கர் நிலத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியது. விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட ஆயிரம் ஏக்கர் நிலத்தை அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு டாடா நிறுவனத்துக்கு ஒதுக்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நில உரிமையாளர்கள், விவசாயிகள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், நிலம் கையகப்படுத்தப்பட்டது செல்லும் என கொல்கத்தா ஐகோர்ட் தீர்ப்பளித்தது.இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு புதன்கிழமை நீதிபதிகள் வி.கோபால கவுடா, அருண் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

sup aug 31

அப்போது நீதிபதிகள், “மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும். இதற்கான ஆய்வுகளை 10 வாரங்களுக்குள் மாநில அரசு செய்து முடித்து. 12 வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் நிலத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும். மேலும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இத்தனை ஆண்டுகளாக இழந்து தவித்து வந்ததால் அவர்களுக்கு அரசு இது காலம் வரை வழங்கி வந்த இழப்பீட்டுத் தொகையை அவர்கள் திரும்பித்தர தேவையில்லை” என உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கான காரணம் தொடர்பாக நீதிபதி கவுடாவும், மிஸ்ராவும் மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர்.

நீதிபதி கவுடா கூறும்போது, “ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக விவசாய நிலத்தை கையகப்படுத்துவதை எப்படி பொது நன்மைக்காக எனக் குறிப்பிட முடியும். சிங்கூர் நிலம் கையகப்படுத்தப்பட்டது முற்றிலும் சட்டவிரோதமான செய்கை” என்றார்.

இந்த கருத்தில் இருந்து நீதிபதி மிஸ்ரா மாறுபட்ட கருத்து தெரிவித்தார். டாடா மோட்டார்ஸ் நிலம் கையகப்படுத்தியதில் ஒரு பொது நன்மை இருக்கிறது. சிங்கூரில் நானோ கார் தொழிற்சாலை அமைந்திருந்தால் அங்கு ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும்” என்றார்.

இருப்பினும் இறுதியில் இரண்டு நீதிபதிகளும் நிலம் கையகப்படுத்துதல் முறையாக அமையவில்லை என்ற கருத்தில் உடன்பட்டனர். நிலம் கையகப்படுத்துதல் சட்டபூர்வமாக நடைபெற வேண்டும் அப்படியில்லாவிட்டால் நிலம் கையகப்படுத்தக் கூடாது என கூட்டாக தெரிவித்தனர். இறுதியாக நீதிபதி மிஸ்ரா கூறும்போது, “நிலம் கையகப்படுத்துதல் பொது நன்மைக்காகவே செய்யப்பட்டிருந்தாலும் நானோ கார் தொழிற்சாலை திட்டம் தற்போது குஜராத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே, நிலத்துக்கான தேவை இப்போது இல்லை. எனவே சிங்கூர் நிலம் கையகப்படுத்தப்பட்டது ரத்து செய்யப்படுகிறது” என்றார்.

முன்னதாக2006-ம் ஆண்டு சிங்கூரில் உள்ள 1000 ஏக்கர் நிலத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் 4,5 பிரிவுகள் பின்பற்றப்படவில்லை. அதாவது நிலத்தை கையகப்படுத்தும் முன் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படவில்லை என்ற வாதத்தை விவசாயிகள் முன்வைத்திருந்தனர்.இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு   சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!