ஓ.. கே – புரூஃப் பண்ணுங்கப்பா! – உத்தராகாண்ட் விவகாரத்துக்கு சுப்ரீம் கோர்ட் சான்ஸ்!

ஓ.. கே – புரூஃப்  பண்ணுங்கப்பா!  – உத்தராகாண்ட் விவகாரத்துக்கு சுப்ரீம் கோர்ட் சான்ஸ்!

உத்தராகாண்டில் வரும் பத்தாம் தேதி காலை 11 மணியில் இருந்து பிற்பகல் ஒரு மணிவரை ஹரிஷ் ராவத் அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், வாக்குப்பதிவு நடைபெறும் இரண்டு மணிநேரத்துக்கு அங்கு ஜனாதிபதி ஆட்சி தற்காலிகமாக தளர்த்தப்படும் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில் காங்கிரஸில் இருந்து கட்சி தாவிய ஒன்பது எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்க கூடாது. வேறு எந்த விவாதமும் அவையில் நடைபெற கூடாது. அமைதியான முறையில் வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

uttar may 6

உத்தராகண்டில் காங்கிரஸ் முதல்வர் ஹரிஷ் ராவத் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஆட்சியைக் கலைத்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் மார்ச் 22-ம் தேதி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசிடம் நீதிபதிகள் 7 கேள்விகளை கேட்டிருந்தனர்.
இந்நிலையில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவகீர்த்தி சிங் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, உண்மையில் அரசுக்கு உள்ள பலம் குறித்து தெரிந்து கொள்ளலாமே என்று யோசனை தெரிவித்தது.

இதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்து 6-ம் தேதி (இன்று) பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டி ருந்தனர். இதையடுத்துஇந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரஸ்தோகி, உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் சுப்ரீம்க் கோர்ட் யோசனையை மத்திய அரசு ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து ஆய்வு செய்ய ஒரு பார்வையாளரை உச்ச நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என்றும். அந்த பார்வையாளர் ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல் ஆணையராக இருத்தல் வேண்டும் என்றும் கோரினார். இதனையடுத்து, உத்தராகண்ட் மாநிலத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான வழிமுறைகளை சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

Related Posts

error: Content is protected !!