போக்சோ வழக்குகளை விரைவாக முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள்1 – சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

போக்சோ வழக்குகளை விரைவாக முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள்1 – சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

இந்திய தேசிய குற்ற ஆவண அறிக்கையின்படி, கடந்த 2016 ஆம் ஆண்டு வரை 1,01,326 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவற்றில் 229 வழக்குகளுக்கு மட்டுமே தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது என்று அண்மையில் தகவல் வெளியாகி இருந்த நிலையில் பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தை களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியவர்கள் மீதான வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் மூலமாக விரைந்து விசாரிக்க மாநில உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நம் நாட்டில் மட்டும் சராசரியாக ஒரு குழந்தை ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர்,என சமீபத்திய அரசாங்க புள்ளிவிவரங்கள் படி தெரிவித்த நிலையில் லாக் அலோக் ஸ்ரீவஸ்தவா என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர் மற்றும் ஓய். சந்திரசூட் ஆகிய இருவரும் இன்று உயர்நீதிமன்றங்களுக்கு கடுமையான உத்தரவுகளை வெளியிட்டனர்.

இந்த போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் விசாரணைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் கண்காணிக்கவும் உயர்நீதிமன்றங்களின் 3 ஐகோர்ட் நீதிபதிகளைக் கொண்ட கமிட்டிகளை அமைக்கலாம் என்றார்கள். அத்துடன் போக்சோ சட்டத்தின் கீழ் நடத்தப்படும் வழக்குகள் 6 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். அதனால் கட்டாயமாகத் தேவைப்பட்டால் ஒழிய அந்த வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ், இனி 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற ஷரத்து வந்துள்ளது. பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தில், மத்திய அரசு அண்மையில் பரிந்துரைத்துள்ள சட்டத் திருத்தம் இது. 2012-ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு சட்டத்தின்கீழ் (Prevention of children from sexual offences act 2012) இந்த மாற்றத்தைக் கொண்டுவர மத்திய அரசு பரிந்துரைந்துள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா சிறுமி பாலியல் வன்முறை வழக்கு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் பாலியல் வன்முறை வழக்கு ஏற்படுத்திய தாக்கத்தைத் தொடர்ந்து, பாலியல் வன்முறை குறித்து பல்வேறு இடங்களில் போராட்டங்களும் கண்டனங்களும் எழுந்ததையடுத்து . மத்திய அரசு , 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வகை செய்துள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில், மேற்படி சுப்ரீம் கோர்ட் ஐகோர்ட்டுகளுக்கு இந்த புது உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடிசினல் ரிப்போர்ட்:

நாடு முழுவதும் 1.33லட்சம் பாலியல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒன்று இரண்டல்ல…ஒரு லட்சம் மகள்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றால் பாலியல் குற்றங்களை விசாரிக்க தனிநீதிமன்றம் உருவாக்க வேண்டியது அவசியம் ஆகும். எனவே போக்சோ வழக்குகளை விசாரிக்க தனிநீதிமன்றங்களை உருவாக்க வேண்டும்என்று  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாட்டில் 1.12 லட்சம்வழக்கு நிலுவை உள்ளநிலையில் தமிழகத்தில் 2,003 போக்சோ வழக்குஇருக்கிறதாக்கும்.

error: Content is protected !!