எப்படி இருந்த ஃபேஸ்புக்.., இப்படி ஆயிடுச்சே!?

எப்படி இருந்த ஃபேஸ்புக்.., இப்படி ஆயிடுச்சே!?

இன்று சன்டே என்பதால் வெகு நாள் கழிச்சு “தத்துபித்து” – இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது – கொஞ்சம் கொஞ்சமாக சிரியாவாக மாறும் இந்த ஃபேஸ்புக்…வெறுப்பு பேச்சுகளின் உச்சகட்டம்…Manners Require Time, Nothing is more vulgar than HA(S)TE…. The Day is not too far for your biased approach friends to realise your worth…. Stay Focussed.

படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என்று பன்முகம் கொண்ட ஃபேஸ்புக்ல நான் அக்கவுன்ட் ஆரம்பிச்சி இந்த வருடத்தோடு 13 ஆண்டுகள் முடியப்போகுது, அந்த வகையில் என்னோடு பெருமையாக கூறக்கூடிய ஒரே விஷயம் – இது வரை என்னை ஃபேஸ்புக் ஒரு நாள் கூட பிளாக்கியது அல்ல, ஒரு நாள் கூட கமென்ட் போட தடையிட்டதில்லை, ஒரு நாள் கூட எந்த ஒரு செயல்பாட்டையும் செய்ய தடை விதித்தது இல்லவே இல்லை…..காரணம் ஃபேஸ்புக் என்ன ஸ்டான்டர்ட்ஸ் செய்து இருக்கிறதோ அதை செவ்வனே செய்வதில் நான் மிக கவனமாக இருந்திருக்கிறேன்.

ஃபேஸ்புக் ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை சில கொள்கை முடிவுகளை கையாண்டிருக்கிறேன். ஒரு ஸ்டிக்கர் கூட இட்டது அல்ல, ஒரு ஸ்மைலியை கூட பயன்படுத்தியது அல்ல, பிறந்த நாள் வாழ்த்தை தவிர “ஃபிரன்ட் ஒன்லீ” என்ற ஆப்ஷனில் போஸ்ட்கள் போட்டதில்லை, என்னுடைய போஸ்ட்கள் 99.9% பப்ளீக் போஸ்ட்கள் மட்டும்தான். தேவையான கன்டென்ட்களை என்னுடைய டைம்லைனில் காண முடியும், மற்ற கரென்ட் அஃபேர்ஸ், WTH,WTF,FLASH UPDATE போன்ற மற்றும் என்று படித்தாலும் இதில் எதாவது ஒரு உபயோகம் இருக்கிறது என்ற போஸ்ட்களை தவிர அனைத்து மறக்காமல் Hide From Timeline ஆப்ஷனுக்கு கொண்டு போய் சேர்ப்பேன், இருக்கு ஆனா டைம்லைன்ல மட்டும் இல்லை என்பது போல…சரி இந்த சுயப்புராணம் தவிர்த்து இன்று ஃபேஸ்புக்கின் நிலமை என்னவென்று கூறவே இந்த போஸ்ட்……

தகவல்கள், கவிதைகள், காமெடி, பக்தி, அறிவியல், சினிமா, விமர்சனம் என்று பன்முகம் கொண்டு எல்லோரும் ரசிக்க கூடிய வகையில் இருந்த ஃபேஸ்புக் கொஞ்சம் கொஞ்சமாக சமீபத்திய நாட் களில் முக்கியமாக கடந்த இரண்டு வருட சொச்ச நாட்களில் தனிமனித தாக்குதலில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக சாதி அரசியல் ஆரம்பிச்சி, மதஅரசியல் ஆரம்பிச்சி, இன அரசியல் ஆரம்பிச்சி இப்ப மெதுவா தமிழ் நாடு வெர்ஸஸ் இந்தியா என்ற வெறுப்பு அரசியலை கையில் எடுத்திருக்கும் சிலர் அவர்களுக்கே தெரிவதில்லை தான் எவ்வகை தவறுகளை செய்கின்றோம் என.

நேற்றைய புது கூற்று, மொழி அரசியல்………. அந்நிய மொழி வேண்டாமெனில் அந்நிய மதத்தை மட்டும் இறுக பற்றிக்கொள்ளும் உங்கள் கூற்று நியாயமா என கூற, ஆங்கிலம் படிச்சாலும் படிப்பேன், பிரெஞ்ச் படிச்சாலும் படிப்பேன், மறந்தும் ஹிந்தி படிக்கவே மாட்டேன்னு சிலரின் வம்படி வாதங்கள், எந்த போஸ்ட் போட்டாலும் அதில் கடைசியா மோடி வெறுப்புணர்வை கொஞ்சமும் பிஜேபிக்கோ அல்லது அரசியலுக்கோ சம்பந்தமில்லா ஆட்களிடம் முரட்டுதனமாக மனம் வருத்தம் செய்யும் வகையில் கமென்ட் இடுவது, கமென்ட் இட்டவர்களை லைக் செய்து ஊமைக்குத்து குத்துவது என பல சைக்கோத்தனங்களை செய்யும் இவர்கள் இரு வகை, ஒன்று அவர்களுக்கே தெரியாமல் இப்படி எதிர்ப்பு, வெறுப்பு, அரசியல் செய்தால் தான் நாமும் கான்ட்ரவர்ஸி பர்ஸனாய் மாற முடியும் என்ற தவறான நினைப்பு அல்லது ஒரு கும்பலாக சேர்ந்து சுத்தி சுத்தி நல்ல நட்பை பேணி காத்த நண்பர்களை சதாய்த்து அவர்களை கஷ்டமாக்குவது என்பது தான் இன்றைய நிலை…..

சிரியா என்ற ஒரு நாடு சின்னாபின்னமான காரணம், அந்த நாட்டில் புரட்சி, புண்ணாக்கு, தனி நாடு என்று பல வகையில் பிரிவினை வாதத்தை அவிழ்த்து விட்ட வகையிலும், பீஸ் மேக்கர்னு சல்லி சல்லியா அந்த் நாட்டை அழிச்ச அந்நிய நாடுகளின் ராணுவ அப்ரோச் வகையிலும் அந்த நாட்டுக்கு இன்னும் ஒரு 30 வருஷத்துக்கு ஒன்றும் இல்லா சுடுகாடாய் போன வகையில் நம்மில் தெரிந்தோ தெரியாமலோ சேர்த்த 5000 நண்பர்களில் பலர் இந்த வெறுப்பு அரசியலுக்குள் அடிமையாக தானும் பேரை கெடுத்து நல்ல நட்புகளையும் கெடுத்து தனித்துவிடப்படும் தூரம் அதிகமில்லை…….

நட்பு பாராட்டத்தான் இங்கே வந்தோமே தவிர ஒருவருக்கொருவர் எதிரியாக மாற அல்ல. நான் கடந்த 2 மாதத்தில் கொஞ்சமும் உபயோகமில்லாத ஒரு 1000 பேர் கிட்ட அன்ஃபிரன்ட் செய்து இருக்கிறேன்……….அவர்களின் வெறுப்பு அரசியலை கண்டு, 1000 பேரை புதிதாக சேர்த்திருக்கிறேன் அவர்களின் பன்முக திறமைக்காக மற்றும் 5 கோடி பேர் தமிழர்கள் (தோராயமாக) இருக்கும் ஃபேஸ்புக்கில் மனம் ஒத்த கருத்துகளை கொண்ட 5000 பேருக்கா பஞ்சம், இல்லவே இல்லை, அதை நோக்கி நான் பிரயானிக்கிறேன், நீங்களூம் சிலரின் தரத்துக்கு நீங்களும் இறங்கி அவர்களின் சப் ஸ்டான்டர்ட் எண்ணங்களுக்கு ஈடாகி நீங்களும் தரை டிக்கெட்டாய் மாறும் முன் உங்களுக்கு உகந்த நண்பர்களுடன் பிராயணிப்பதே சாலச்சிறந்த செயல். இருந்து ஒரு 500 மாற்று அரசியல், மாற்றும் கொள்கை, மாற்று மதம், மாற்று இன, மாற்றும் மொழி என ஒரு 10% சதவிகித நண்பர்கள் இருப்பதின் காரணம், என் வழி தனி வழி,

ஆனா நண்பனாய் உன் கோட்டை தாண்டி நானும் வர மாட்டேன்னு அவர்களின் வழியை அவர் களுடன் மட்டுமே கொஞ்சம் லெவல் ஹெட்டாய் பயணிக்கும் நண்பர்களை நான் மட்டுமல்ல சிலரும் இன்னும் வைத்திருக்கும் ஒரே காரணம், அவர்கள் நட்பை மையைப்படுத்தி மற்ற விருப்பு வெறுப்புகளை வம்படிக்கு திணிப்பதில்லை என்பதே உண்மை……….

High Time to FRAGMENT YOUR FACEBOOK Friends…… If they are recently changed for ANY REASON…. Have a Great Sunday folks….

error: Content is protected !!