லைக் வேணுமா ..லைக்? பேஸ் புக்கில் லைக் அதிகரிக்க என்ன செய்யணும்?

லைக் வேணுமா ..லைக்? பேஸ் புக்கில் லைக் அதிகரிக்க என்ன செய்யணும்?

இன்று சண்டே என்பதால் “தத்து பித்து” – இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது – லைக் ஒரு மாயை – உங்கள் எழுத்துக்களை என்றும் நிறுத்தவேண்டாம்….. உங்களுக்கு கிடைக்கும் லைக்குகளை ஐந்நூறு முதல் எண்ணுறு மடங்கு பெருக்கி கொள்ளுங்கள் அவ்ளோதான்…..!

கடந்த பத்து ஆண்டுகளாக – ஒரு பொது அங்கலாய்ப்பு இந்த முகப்புத்தகத்தில்……. எனக்கு இம்புட்டு பிரண்டு இருக்கு ஆனா இமாத்தூண்டு லைக் தான் வருது – அதனால களை எடுக்கணும், அன் பிரண்டு செய்யணும்ங்கிற விஷயம் நெம்ப நாளா பார்க்கிறேன்…… அதனால உண்மை பெண்கள் என்பதால் லைக் வரும், பிரபலத்துக்கு மட்டும் தான் லைக் வரும்னு சொல்ற உண்மை உண்மையில்லை….!

வேணும்னா ஒரு சிம்பிள் டெஸ்ட் செய்யுங்க….. நல்ல எல்லோரும் பார்க்க கூடிய வகையில் ஒரு விடியோவை அப்லோட் செய்யுங்க….. அது போஸ்ட்டை ஒரு மூணு நாள் கழிச்சி பாருங்க…. உங்களுக்கு வந்த லைக்கும் – வியூஸ்க்கும் – 900 % மடங்கு வித்யாசம் இருக்க கூடும்…. இது தான் நிதர்சனம்…….. நான் பார்த்த வரையில் நல்ல போஸ்டுக்கு கூட அந்த லைக் பட்டனை மறந்தும் அமுக்கிற கூடாதுன்னு ஒரு ஈகோ இன்று அளவிலும் 60 – 72 % மக்களிடம் உள்ளது….. அதையும் மிஞ்சி உண்மையான தரமான போஸ்டுக்கு லைக் போடும் ஆட்களும், பிரபலம் இவர் அட்டென்சன் வேணும்ங்கிற ஆட்களும், இவர் இன்னும் குளோஸ் ஆகணும்ங்கிற ஆட்களுக்கும் தான் மிச்சம் உள்ள 30 – 35 % லைக் போடுறாங்க…..!

தரமான போஸ்டாக இருந்தாலும் சில பேர் லைக் போடாமல் அதை ஷேர் செய்வார்கள்….. சிலர் அதை அவர்கள் எழுதியது போல போடுவார்கள்  அதை பல முறை உணர்ந்திருக்கிறேன்… அதனால் உங்கள் எழுத்துக்களை, எண்ணங்களை சொற்ப லைக் தான் வருகிறது என்பதற்காக விட்டு விடாமல் எழுதி கொண்டே இருங்கள், ஷேர் அதிகம் வரும் மாதிரி எழுதினால் நீங்கள் தான் உண்மையான பிரபலம்…!

Example – இரண்டு நாள் முன்பு போட்ட எம் எஸ் வி வீடியோ – 23 ஆயிரம் வியூவ்ஸ்… 1200 லைக்ஸ், 853 ஷேர் இது தான் நிதற்சனம், 23K Vs 1.2K, Stil i can say how many shred the post without even liking that too close friends….. சோ – அல் தி பெஸ்ட் …..But keep Writing

error: Content is protected !!