மைனர் குஞ்சுகளும் – மனித உரிமை ஆர்வலர்களும்….!

இன்று சண்டே என்பதால் தத்து பித்து – இன்று தத்து பித்துவில் நாம் வாசிக்க போவது – மைனர் குஞ்சுகளும் – மனித உரிமை ஆர்வலர்களும்…..!

என்கவுண்டர் விஷயம் வெளியே வந்தவுடன் வெகு ஜன மக்களின் ஆர்ப்பரிப்பும், மதியம் 3 மணிக்கு மேல் ரிவர்ஸ் டெம்ப்லேட்டுடன் அது தவறு – சட்டம் தான் தான் கடமை செய்யணும்னு – மிச்ச பெரும் பான்மை மக்கள் ஆரம்பிக்க – யார் இவர்கள் என்று உற்று பார்த்தால் – பெரும்பாலானோர் பிரபலங்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், டிவி பிம்போக்கள்……. ஏன் ? வாழ்க்கையின் முக்கால் பகுதியை கேடிகளுக்கு, கொலைக்கரங்களுக்கு மற்றும் சமூக அத்தனை தப்பானவங் களுக்கும் வக்காலத்து வாங்கிட்டு – கடைசி ரீலுள்ள வில்லன் திருந்திய மாதிரி நீதிபதி என்னும் நீதி அரசர் ஆகும் இந்த வக்கி(யி)ல்கள் தான் முக்கிய பிரச்னை = சட்டத்தில் மேல் சாதாரண மக்களுக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் அதை இறுதி தீர்ப்பாக 20 வருஷமாக ஆக்கி அதற்கு பின் அப்பீல் ஒரு 4 வருஷம் அதுக்கு அப்புறம் கருணை மனு ஒரு 4 வருஷம்னு இழுத்தடிக்கும் இந்த அவலம் தான் இந்த உடனடி தண்டனை அவர்களை என்னை போன்ற உணர்ச்சி உப்புமாக்களையும் ஆனந்தம் கொள்ள வைக்கிறது.

பணக்காரன் என்கவுண்ட்டரில் கொல்லப் படுவதில்லை என்ற நீலி கண்ணீருக்கு காரணம் – இதே பிரச்சினை தான் – அக்யுஸ்ட் அரெஸ்ட் ஆவதற்கு முன் அவன் லாயர் படை அவனுக்காக ஸ்பாயிட் பெயில் வாங்கிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து நிற்பதால் தான்….. இந்த வக்கீல் தான் பிற் காலத்தில் நீதிபதி……… நல்ல போலீஸ்க்கு தப்பு செஞ்ச எவனையும் பச்சாதாபம் பார்க்கும் குணம் கிடையாது ஆனாலும் இந்த வக்கீல்கள் எங்க என் கிளையண்ட் மேல கை வை பார்க்க லாம்னு காக்கியை நோக்கி வைக்கும் மிரட்டல்கள் தான் பணக்கார மைனர் குஞ்சுகளை வளர்த்து விடுகிறது.

போலீஸ் நல்லவர்கள்னு ஒரு புறம் பொங்கும் மக்களுக்கு – போலீஸ் நாம் நாட்டில் மாற இன்னும் பல பத்து வருஷங்கள் ஆகும் நிலைமை தான் இருக்கு. பிக்பாக்கெட்டுகள் ஜாக்கிரதைன்னு போலீஸ் ஸ்டேஷனில் பலகை வைத்திருப்பித்திலேயே தெரியும் எத்தகைய அசிங்கம் என்று. அது போல இந்த மாதிரி ஹை ப்ரொபைல் மற்றும் சமூக வலை தள பிரபல கொலைகளை – அக்கு வேரா ஆணி வேற போலீசை கிழிப்பதை மட்டும் இல்லாமல் அந்த அக்யுஸ்ட்களை நீதி மன்றம் அழைத்து செல்லும் பொது ௦ பொது மக்களின் கோபம் அந்த போலீஸ் வண்டிகளை தாக்கிய வகையில் – அவர்களுக்கு தெரிந்திருக்கும் நெருப்பில் நடக்கும் இந்த பிரச்சினை அணைய – பாத்ரூம் வழுக்கல் -2 இட்லி சாப்பிட்டு எலக்ட்ரிக் வயரை கடித்து சாவது – வயிற்று வலியால் தூக்கு மாட்டி சாவு – மற்றும் என்கவுண்டர் என்று ஒவ்வொரு முறையும் போலீஸ் பொதுமக்கள் கோபத்தை தணித்து கொள்கிறது – இது நிரந்தரம் அல்ல சரியான தீர்வும் அல்ல அனால் இதை செய்வதை தவிர அவர்கள் தான் மேல் உள்ள கோபத்தை குறைத்து கொள்ள வாய்ப்பே இல்லை

நான் மற்றும் பல பேர் இங்கு இந்த என் கவுண்டர் சரி என கொள்ளும் காரணம் – நாங்க சராசரி மனிதர்கள் – சிலரை போல் நாடு நிலை பிரபலங்களாகவோ அல்லது அரசியல் சில்வண்டு களாகவோ மற்றும் மனித உரிமை மொத ஏஜெண்டுகளாகவோ ஆவதற்கு தயாரில்லை என்பது தான் உண்மை. ஏன் என்னை போல் திருப்பூர் கலெக்டர் இந்த என்கவுண்ட்டரை ஆதரித்துள்ளார் – ஒரு ஐ ஏ எஸ் இப்படி சொல்லலாம்ணு கேட்ட அதனை பேருக்கு பதில் – இது என் தனிப்பட்ட கருது என்பதை தவிர ஒன்றுமே கூறவில்லை – நாம் இயல்பாய் இருப்போம்.. சாதாரண மனிதர்கள் அப்படிப்பட்டோருக்கு இந்த முடிவு சரியானதே……..!

Your choice is being human or human being….. PERIOD