October 3, 2022

மும்மொழி கொள்கையும்…….மூடர்கள் கூட்டமும்…!

வழக்கம் போல எது டெல்லியிலிருந்து வந்தாலும் உடனே எதிர்ப்போம், அதை திரித்து பொய்யுரை செய்வோம், மக்களை குழுப்புவோம் இதெய்ல்லாம் காலம் காலமா செஞ்சு தானே அரசியல் செய்கிறோம் என்ற மூடர்கூட்ட அரசியல்வாதிகளிடம் இருந்து தெளிவு பெற வேண்டியது காலத்தின் கட்டாயம் அல்லது உங்கள் படிப்பை கொஞ்சமும் நீங்கள் உபயோகிக்கவில்லை என்பது தான் பொருள்….!

கஸ்தூரி ரங்கன் முன் மொழிந்த‌ மும்மொழி கொள்கை ஒரு மாதிரி வரைவு தானே தவிர சட்டமோ, மசோதாவோ அல்ல. இந்த வரைவு கொள்கையில் எந்த ஒரு இடத்திலும் ஹிந்தி அந்த மும்மொழி கொள்கையில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என கூறவில்லை. நிறைய பேருக்கும் தாய் மொழியை கற்பது, அல்லது தாய் மொழி வழி கற்பது என்ற பெரிய வித்தியாசத்தை கூட இவர்களுக்கு தெரியவில்லை.

தமிழ் நாட்டில் ஹிந்தி வேண்டாம் என சொல்லும் பல மூடர்கள் கூட்டம் அதை ஆக மொத்தமாக எல்லா பள்ளிகளிலும் ஹிந்தியை மொத்தமாக‌ ஒழிக்க ஒரு ஆனியும் புடுங்கவில்லை என்பது தான் உண்மை. இங்கே இருக்கும் சி பி எஸ் ஈ பள்ளிகளில் கட்டாயம் ஹிந்தி உண்டு. உடனே ஸ்டாலின் மகள் ஸ்கூலில் ஹிந்தி உண்டு என்றெல்லாம் சின்ன விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம். திருவள்ளுவரே இன்று சி பி எஸ் ஈ சிலபஸில் பள்ளி நடத்தினால் ஹிந்தி தவிர்க்க முடியாத ஒன்று.

இந்த மும்மொழி கொள்கை எவ்வாறு சிறந்தது!!

மும்மொழி கொள்கை இல்லையெனில் – சி பி எஸ் ஈ – ஆங்கிலம், ஹிந்தியை 99% கற்பிக்கின்றது. இந்த இரட்டை மொழி கொள்கை வந்தால் சி பி எஸ் ஈ பள்ளீகள் தமிழை மொத்தமாக புறக்கனித்துவிடும். இது தமிழ் நாட்டில் மட்டுமல்ல எந்த ஒரு மானிலத்திலும் கூட. தாய் மொழி என்ற ஒன்று இல்லாமலே போகும் அபாயம் அடுத்த சந்தியினருக்கு.

கேரளா, கர்னாடகா, ஆந்திரா போன்ற பக்கத்து மானிலமோ அல்லது வேறு மானிலத்தில் படிக்கும் தமிழ் குடும்பங்கள் கண்டிப்பாய் அந்த மானில மொழி முதல் மொழியாகவும், ஆங்கிலம் இரண்டாவதாகவும் ஆரம்பித்து தமிழ் என்ற ஒன்றை படிக்கவே இயலாமல் போகும் அபாயம் ஏன் என்றால் மும்மொழி கொள்கை இல்லையெனில் இரட்டை கொள்கையில் கண்டிப்பாய் 100% ஆங்கிலம் இடம் பிடித்துவிடுகிறது. இது தமிழ் மட்டுமல்ல உதாரணத்திர்க்கு ஒரு ஆந்திர மானில பிள்ளைகள் இங்கு படித்தால் அவர்களின் தாய் மொழி தெலுங்கோ அல்லது ஹிந்தி தாய் மொழியாக கொண்டுள்ள பல மானில பிள்ளைகள் தன் தாய் மொழியான ஹிந்தியை படிக்கவே இயலாது…. அவர்கள் தமிழ் நாட்டில் படிப்பதென்றால் என்றால் அது ஒரு இனத்தை மொழியை கொல்லுவதர்க்கு சமம்.

வெறும் தாரை பூசினால் ஹிந்தி அழியும் என்ற ஒரு முட்டாள்தனத்தை மூன்று பத்தான்டுகளுக்கு மேல் செய்த ஒரு கருமத்தினால் தான் இன்று உன் மானில அரசு அலுவுலக கோட்டத்தில் ஒவ்வொரு தமிழனுக்கு பதிலாக ஹிந்தி பேசும் அதிகாரிகள் இருக்கின்றனர். கொஞ்சம் வெளியே வாருங்கள், ரயில்வே, விமான நிலையம் அல்லது மத்திய அரசின் பெரும் அலுவுலகங்களில் ஹிந்தியே முன்னிலைப்படுகிறது, இது நான் சொல்லும் தமிழ் நாட்டிலே…!

ஹிந்திக்கு ஆதரவோ, எதிர்ப்போ என்னிடம் இல்லை, ஆனால் ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒரு பள்ளிகளில் கூட ஹிந்தியை பயிற்றுவிக்க கூடாது என சட்டம் வராத வரையில் இந்த ஏழை அரசாங்க அல்லது ஸ்டேட் போர்ட் பள்ளிகளில் படிப்பவர்கள் மட்டும் ஹிந்தி கற்க கூடாது என கூவும் அரசியல் கூமுட்டைகள் உண்மையில் இவர்கள் பிரச்சினை ஹிந்தி அல்ல……. சுயநல அரசியல் தவிர வேறு ஒன்றும் அல்ல.

மும்மொழி கொள்கை மூலம் – தாய் மொழி + ஆங்கிலம் + உங்களின் விருப்ப மொழியை நீங்கள் அடிஷனலாய் கற்பது எந்த விதத்திலும் நட்டமே இல்லை என்பது 100% உண்மை………….. காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இல்லாத போதெல்லாம் இந்த ஹிந்தி எதிர்ப்பு அத்தி பூத்த சித்தப்பா போல தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கும் என்பதே உண்மைங்கோ…………

பி எஸ் – இந்த போஸ்ட்டுக்கான கமென்ட்கள் மட்டும் தான் இங்கே  வரவேற்கப்படுகின்றன… உனக்கு கக்கா கன்ஸிஸ்டன்ஸியா வரலைனா கூட பிடிக்காத அரசியல் தலைவர்களை விமர்சிப்பதுபோல இங்கும் செய்தால் உங்கள் கமென்ட்கள் நீக்கப்படும்……..படித்தர்வர்கள் போல் பண்பானவர்களாய் இருங்கள்.

PS – NO ARGUEMENTS -NO GENERAL BIAS – Let the World’s LARGEST democracy and their Citizens decide on their LITERACY CHOICE – You Me or Anyone DON’T HAVE the right to DECIDE.