June 24, 2021

என்னுடைய 10 வருட ஃபேஸ்புக் சகவாசமும்…200 வருட அனுபவமும்…!

இன்று சன்டே என்பதால் தத்துபித்து!…. இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது – என்னுடைய 10 வருட ஃபேஸ்புக் சகவாசமும்….200 வருட அனுபவமும்….. (  இதில் கொஞ்சம் அல்ல ஃபுல்லா சுயபுராணம் தான் அதனால் ரீடர் டிஸ்கிரீஷன் இஸ் அட்வைஸ்ட்….)சாக்கிரதைப்பூ!!!

ravi dec 18

இந்த மாதத்தோடு ஃபேஸ்புக்கில் சேர்ந்து 10 வருடங்கள் முடிய போகிறது என்றாலும் இந்த பத்து வருட அனுபவம் 200 வயசை விட அதிகம் கொண்டிருந்தது என்றால் மிகையல்ல………2006ல் பயணத்தை ஆரம்பித்தாலும் 2010 வரை வெறும் 375 நண்பர்களை மட்டுமே வைத்திருந்தேன். அந்த 375 பேர் எனக்கு நன்கு பரிச்சயம் ஆனவர்கள். அதே சமயம் ஒவ்வொரு பேரையும் கண்டிப்பாய் சாட் அல்லது அவர்கள் வாலுக்கே சென்று என்ன்ப்பா சத்தமே இல்லை என்று உரிமையுடன் வாரம் ஒரு முறை சென்று குசலம் விசாரித்த நாட்கள் உண்டு. அதன் பின்பு கொஞ்சம் வாழ்க்கை கொஞ்சம் பிஸியாகிபோனதால் டி ஆக்டிவேட் செய்து ஃபேஸ்புக்கை மறந்தே போய்விட்டேன். பின்பு ஒரு ஏழு மாதம் கழித்து ஃபேஸ்புக் நீங்கள் உங்கள் அக்கவுன்ட்டை தொடர் விருப்பமில்லையெனில் உங்கள் அக்கவுன்ட் அழிக்கப்படும் என்று பல முறை நூல் விட்டும் சீ இதுல டைம் வேஸ்ட் பண்ண விருப்பமில்லை என்று எனக்கு நானே நாட்டாமை தீர்ப்பை கொடுத்து மறந்துவிட்டேன்.

அப்புறம் கொஞ்சம் முடக்கம், அதிக FREE நேரம் என்ற காரனத்தினால் லாகின் செய்தால் லாகின் எரர் என்று காட்டியது. ஃபேஸ்புக் புது அக்கவுன்ட்டை வேண்டுமானால் உருவாக்கி கொள்ள முடியும் ஆனால் பழைய மேட்டரெல்லாம் சர்வர் சேஞ்சிங் போகி பண்டிகையில் எரியூட்டிய மாதிரி பனால் என்று கூறினார்கள். ஆனால் அதே லாகின் கொடுக்கிறோம் ஆனால் பழைய டேட்டா இல்லை என்று கூறி வெற்று கூடாய் அக்கவுன்ட் கையில் கிடைத்தது. 2010 அக்கவுன்ட் ஆரம்பித்து அந்த 375 நண்பர்களில் அனேக பேரை மீண்டும் இணைத்து கொண்ட போது தான் தெரிந்தது அதில் முக்காவாசி பேர் எதுக்குதான் அக்கவுன்ட் ஆரம்பித்தார்கள் என்று. ஏன் என்றால் வருடத்திற்க்கு ஒரு ஆக்டிவிட்டி கூட இல்லாமல் பலர் Travel செய்து கொண்டிருந்தனர்.தமிழ் நல்லா பேசுவேன், ஆனால் தமிழில் தட்டச்சு செய்ய தெரியாது என்றை நண்பர் ஒருவரிடம் கூறியபோது என்னசார் தமீழ்ல எஸ் எம் எஸ் அனுப்ப உங்களுக்கு கண்டுபிடிக்க தெரிகிறது ஆனால் யுன்கோடிங் மூலம் தமிழ்ல டைப் செய்து போஸ்ட் போட முடியாதா என்று கேட்ட போது உரைத்த ஞானம் தான் இந்த யுனிகோடிங் டைப்பிங்.

இன்று வரை இன்னொரு பிரவுசரை ஒப்பன் செய்து அதில் Englishla டைப்பிட்டு பின்பு அதை கட் அன்ட் பேஸ்ட் செய்து தான் போஸ்ட் கமென்ட் போடுகிறேன் இன்று காலை வரை தமிழ் கீ போர்ட் டைப்பிங்னா என்னானே தெரியாது. அதனால் தான் சில சமயம் ஆங்கிலத்தில் கமென்டு செய்வேன் தமிழ் அர்த்ததில்.இன்னும் தமிழ்ல ஓட்டை ஓசோன் அளவுக்கு இருந்தாலும் பல வெளி நாட்டு / வெளி மாநில / வேற்று மாநில நண்பர்கள் கடனேன்னு இந்த ஜாங்கிரி லாங்வேஜுக்கு லைக்கை போட்டு போய்கிட்டே இருப்பாங்க. இன்ஃபார்மேஷன் இஸ் வெல்த்னு என் தலைவன் செந்தில் ஒரு படத்தில் சொன்ன கருத்து தான் இன்று வரை என்னை வியக்க வைத்த வாசித்த விஷயங்களை அப்படியே தமிழாக்கம் செய்யாமல் புடிச்ச கொலோக்கியல் வகையில் செய்ய என் மனதுக்கு பிடித்த விஷயம் மற்றவர்களுக்கும் பிடிக்க அதே கொள்கையில் தகவல்களை “டமீல்” லாங்குவேஜ்ல சொல்வேன்.

ஆனால் கொஞ்சம் கூட்டம் சேர லைக்கும் சேர 100 லைக் என்பதைச ர்வ சாதாரணமாக கிடைக்கும் மனபினக்கில் கன்ட மேனிக்கு எல்லா சப்ஜெக்ட்டையும் எழுதி அதில பலர் மாட்டு சானியையும் மனுச சானியையும் எரிந்தும் புத்தி வராமல் சுற்றி திரிந்த காரணம் 2011ல் 5000 பேரையும் சேர்த்தாச்சு என்ற வெத்து கெத்து தான் இந்த பாழாபோன ஆன்லைன் சன்டியர் இமேஜுக்கு.

அப்புறம் பலர் தாக்க பலர் தனி Post போட்டு வரிசை வைக்க இன்னும் சில பேர் அதை இன்பாக்ஸில ஊதி பெரிதாக்க ஒவ்வொரு நாளும் சோகத்தின் வடிகாலாய் ஃபேஸ்புக் மாறியது. இதை பலர் என்னிடம் சொல்ல, ஏங்க ஃபேஸ்புக் செருப்பு மாதிரி லாகவ்ட் செய்யும் போதே கழட்டி வைச்சிட்டு வரனும் சொல்லிட்டு அந்த நாய் சானி மித்தித காலோடு வந்து இரவு முழுக்க நாளை எப்படி தாக்கலாம் என்று நாசாமாய் போன சிந்தனையுடம் மறு நாள் நம்ம பங்கிற்க்கு குறை வைக்காமல் திரும்பவும் சானி எறிய அப்புறம் தான் புரிந்தது நாம் எறியும் சாணி பாதி ஃபேக் ஐடி மிச்சம் உள்ளது நம்ம சண்டை போடும் அளவுக்கு வொர்த் இல்லைனு. அப்புறம் பிடிக்காத ஆளுங்களை அன்ஃபிரன்டு மட்டும் செய்வேன் எவன் வந்து இன்பாக்ஸில ஏங்க அவன்/அவ என்ன போஸ்ட் உங்களை பற்றி போட்டிருக்காங்கன்னு சொன்னாலும் அப்படியானு கண்டுக்காம போகும் மன நிலை வரவே 7 வருஷம் ஆச்சு. அதையும் மிஞ்சி நன்கு இங்கு லைக்கி சூப்புர் பாஸ்னு சொல்லிட்டு அங்கிட்டு போய் சாடமாடையாய் போஸ்ட் போட்டிருக்கும் ஆட்களின் போஸ்ட்களிலே போய் தேங்க்யூனு சொல்லும் பக்குவம் வந்தது.

லைக் எனக்கு முக்கியமில்லை ஏன் என்றால் எந்த ஒர் போஸ்ட்டும் 100 லைக்கிற்கு குறைவாய் வந்தததில்லை அதே மாதிரி 14,650 லைக்கு மேல் வாங்கியது பற்றியும் பெருமை அல்ல சமீபத்திய வீடியோ 11,000 வியூஸ் தாண்டியதும் மனதில் கர்வம் கொள்ளவில்லை ஆனாலும் அதிக ஷேர் செய்யும் ஆர்டிக்களாய் டார்கெட் செய்து போஸ்ட்டாய் போடுவது தான் என் சிறப்பு. பல சமயம் 9000 ஷேர் என்று இருக்கும் ஆனால் 600 லைக் தான் இருக்கும் அந்த லைக் பார்க்காமல் அந்த ஷேர் மேட்டர் தான் எனக்கு முக்கியம் பல விஷயங்கள் பலருக்கு போய் சேருவதில் பெருமை என்று கருத்து கொண்டிருந்தாலும் பல பத்திரிக்கையில் பிரசரித்த ஆர்டிக்களை இது வரை ஒரு முறை கூட சுய விளம்பரத்திற்க்கு ரீ பப்ளீஷ் செயதது இல்லை.

புரஃபைல் போட்டோவை என்னுடைய அல்லது என் தாயை தவிர வேறு யாருக்கும் விட்டு கொடுத்தது இல்லை. பர்ஸனல் / ஃபேமிலி போட்டோ போடுவதில்லை. பக்கத்து வீட்ல நண்பர்கள் இருந்தாலும் மிக மிக சில பேரை தான் சந்திப்பேன் பேசுவேன் என்று ஆன்லைன் புலியாகவும் ஆஃப்லைன் கொட்டை எடுத்த புளியாகவும் இந்த 10 வருஷ ஃபேஸ்புக் என்னை மாற்றியது. மொத்தம் 5000 நண்பர்கள் 17000 சொச்ச ஃபாலோவர்களை கொண்டிருந்தாலும் 100 பேரை கூட சந்தித்திருக்க மாட்டேன் என்பது தான் உண்மை. அதற்காக மற்றவர்கள் எந்த விதத்திலும் தாழ்ந்தவர்களோ பிரச்சினை உள்ளவர்களோ அல்ல அவர்கள் அனைவரையும் சந்திக்க விருப்பம் கண்டிப்பாய் சந்திப்பேன். சிலர் இவர் குற்றவாளி அதனால வெளிப்படை இல்லை என்றும் சிலர் இவன் ஒரு உளவாளி என்றும் சிலர் இவன் மாற்றான் நாட்டின் ராணுவத்தில் பணியாற்றும் ஆள் என்றும் நிறைய பேருக்கு அந்த இந்தானு ஒவ்வொரு நாட்லே இருந்தும் ஒரு நாள் பைலட் ஒரு நாள் ரயில் பிரயாணி என்று ஒரே குழப்பத்தின் வித்தாய் இருந்திருக்கிறேன் என்பதே உண்மை.

ஃபேஸ்புக் கற்று கொடுத்தது ஒன்று தான் ஒன்று அல்லது இரு போஸ்ட் ஒரு அல்லது மூன்று மணி நேரத்திர்க்கு மேல் இங்கு குந்த வைத்தால் குடும்பத்துக்கு ஆகாது என்பது தான் உத்தமம். இதையும் தான்டி இங்கு நகர்ந்துவிட்ட கடா போல வர்ச்சுவல் கம்பத்தில் கட்டி போட்ட எஃபக்ட்டில் சுற்றி தெரியும் விஷயத்தை பார்க்கும் போது வியப்பை தாண்டி ஒரு பயம் வரும்……….பெருமை பீத்தி கொள்ள, கெத்தை காட்டி கொள்ள, மனதில் உள்ளதை எல்லாம் தத்துபித்தாய், இப்படி பல வடிவின் பரிமானம் தான் இந்த ஃபேஸ்புக் nothing more to me.

ஒற்றை வரி விமர்சனம் – பத்து வருட ஃபேஸ்புக் நரகத்தில் இருக்கும் சொர்க்கம்……….

பி கு – உங்களுக்கு இங்கெ என்ன கர்மாவை செய்ய விருப்பமோ அதை சொர்கத்தில் அல்லது நரகத்தில் செய்யலாம் என்பதே இந்த பித்துவின் கருத்து……ஆஹேம்……..ஆல் இஸ் வெல்……என்ன ஒண்ணு கொஞ்சம் ஆழம்.