சசிதரூர்தான் அவர் ஒய்ப் சுனந்த புஷ்கரை டார்சசர் பண்ணி சூசைட் பண்ண வைச்சார்!

சசிதரூர்தான் அவர் ஒய்ப் சுனந்த புஷ்கரை டார்சசர் பண்ணி சூசைட் பண்ண வைச்சார்!

இந்திய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி, சினிமாக்களாகிக்கூட வந்து விட்ட சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கின் குற்றப்பத்திரிகை டெல்லி மாநகர நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அதில் சுனந்தா புஷ்கர் தற்கொலை செய்துகொள்ள அவரது கணவரான காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தான் காரணம் என டில்லி போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர் என்பதுதான் ஹாட் டாபிக்.

கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் டில்லி நட்சத்திர ஹோட்டல் அறையில் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.பியுமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சுனந்தா மர்ம மரணம் தொடர்பாக டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பிரேத பரிசோதனையில் சுனந்தாவின் உடலில் விஷம் கலந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டது. அதை தொடர்ந்து சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சுனந்தாவின் மரணத்துக்கு அவரது கணவர் சசி தரூர் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பான குற்றப்பத்திரிக்கை டெல்லி மாநகர நீதிமன்றத்தின் நீதிபதி தர்மேந்திர சிங் முன்னிலையில் டெல்லி போலீசார் தாக்கல் செய்தனர்.சுமார் 3000 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப் பத்திரிகையில் சசிதரூர் தன் மனைவியை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக கூறப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சுனந்தா புஷ்கர் தற்கொலை செய்துகொள்ள சசி தரூர் தூண்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Congress MP Shashi Tharoor at Parliament house during Monsoon session in New Delhi on July 27th 2015. Express photo by Ravi Kanojia.

சசி தரூர் மீதான குற்றசாட்டுகளுக்கு தேவையான ஆதாரங்கள் உள்ளன. எனவே சசி தரூரை குற்றவாளியாக அறிவித்து நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட வேண்டும். அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று டில்லி போலீசார் தரப்பில் நீதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது. இறுதியில் வழக்கு விசாரணையை வரும் மே 24ம் தேதிக்கு நீதிபதி தர்மேந்திர சிங் ஒத்திவைத்தார்.

இதே சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் சசி தரூர் மீது ஏற்கெனவே பெண்கள் மீதான வன்கொடுமை சட்டப்பிரிவு 498 ஏ மற்றும் தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் சட்டப்பிரிவு 306ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை சசி தரூர் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!