இஸ்ரோவின் நிலாப் பயணச் சோதனையும், சாதனையும்!

இன்று சண்டே என்பதால் தத்துபித்து – இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது.. . வானமே எல்லை என்பது போய்…… வானம் ஒரு எல்லையே இல்லை என்பதை நிரூபித்த இஸ்ரோ பற்றி தான் இப்போ கொஞ்சூண்டு பார்க்க போறோம்!.

ஆரம்பிக்கும் முன் – “எனக்கு எல்லாம் தெரியும் என்பது இல்லை கூற்று”

“எனக்கு எதுவும் தெரியாது என்பது அல்ல உண்மை “.

உலகத்தில் அனைத்து நாடுகளும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களாக வைத்து கோடி கோடி யாக பட்ஜெட்டை செலவழிக்கும் போது …… இஸ்ரோ மட்டும் தான் கோடிகளை சொற்ப விலையில் சாட்டிலைட்களை விண்ணில் ஏவி பல கோடி அந்நிய செலாவணியை கொண்டு வருகிறது மற்றும் ஆராய்ச்சியையும் / பிஸினஸையும் செய்யும் ஒரே நாடு – ஒரே அரசாங்கம்…!

இந்த Background படத்தை நான் போடும் கரணம் பீத்தலுக்கு அல்ல…….. உலகின் நம்பர் 1 விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் முக்கிய மற்றும் பல முறை வின் வெளிக்கு சென்று வரும் ஆஸ்ட்ரோனுட்கள் இறங்கும் முக்கிய இடமான ” கென்னடி ஸ்பேஸ் சென்டர்” இன்று இதன் 75 % செயல்பாடு நான் consultantaha வேலை பார்க்கும் ஸ்பேஸ் எக்ஸ் (Space X) என்னும் நிறுவனம் தான் வைத்திருக்கிறது…. முக்கிய ராக்கெட் லான்ச்சுகளை நாசா இந்த கம்பெனிக்கு பல வருஷங்களுக்கு கொடுத்து விட்டது…… அதனால் தான் சாதாரமான ஆட்கள் நுழைய முடியாத இடத்தில் இருந்து நான் கிரகித்த சில விஷயங்கள் உங்களுக்கு …….

உலகமே 7 செப்டம்பர் அன்று இந்தியாவின் சந்திராயன் 2 லேண்டிங் பற்றிய இஸ்ரோவின் லைவ் விஷயத்தை உற்று நோக்க….. ஹார்ட் பிரேக்கிங் முடிந்து சாப்ட் பிரேக்கிங் ப்ரொசிஸில்….. கடைசி சில நொடிகளுக்கு முன் 2 .1 கிலோமீட்டர் தூரத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்ட.. அங்கிருந்து ஆரம்பிக்கிறது நிறைய பாராட்டும் சில கேலி பேச்சுகளும்……

சந்திராயன் 2 ஆகட்டும்…. மங்கள்யான் ஆகட்டும் இரண்டும் – உலகின் முன்னோடி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கூட செய்ய முடியாத ஒன்றை தான் இஸ்ரோ சத்தமில்லாமல் செய்து முடித்திருக்கிறது…அது தான் மெயிடன் (Maiden)அட்டம்ப்ட் என்னும் முதன் முதலாக செய்து முடித்த சாதனை ….!.

நிலா ஓகே 3 லட்சத்து 80 ஆயிரம் கிலோமீட்டர் தான்….. கைவசப்படும் தூரம் தான் ஆனாலும் ….. 5 . 4 கோடி கிலோமீட்டரை கடந்து – மார்ஸை அடைந்த போது…..இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் விட 12 மடங்கு அதிகம் செலவு செய்யப்பட்டு கொஞ்ச நாட்களுக்கு முன்பு போய் இறங்கிய லேண்டர் மங்கள்யானை நோக்கி – நமஸ்தே என கூற – பதிலுக்கு கெத்தாக – ஹௌடி என மங்கள் யான் கூற உலகம் உணர்ந்தது – இஸ்ரோவும் இந்தியாவும் அடைந்த வெற்றி நாசா … ஈஸா, என பல விண்வெளி ஆராய்ச்சி பல முறை முனைப்பெடுத்தும் சாதிக்க முடியாத ஒன்றை ஒரே அட்டம்ப்ட் டில்…. அதுவும்……. சூடு வைக்காத ஆட்டோ மீட்டர் விலையை விட மலிவாக 5 . 4 கோடி கிலோ மீட்டர்களை அடைந்த சாதனை இதை போல பல சோதனைகளை கொண்டது…….

பூமியை சுற்றி கடைசியில் அடுத்த கட்டத்தை அடைய முனைப்பெடுத்தபோது போதுமான விலா ஸிட்டி இல்லை என சிக்னல் வர அதிர்ந்து போனது இஸ்ரோ …… சரி இன்னொரு முறை எஞ்சினை இயக்குவோம் என முடிவு ஆனா போது அதை செய்தால் மார்ஸ் அடைய எரிபொருள் பற்றாது என விஞ்ஞானிகள் தெரிவிக்க அதை செய்து அஞ்சு கோடி கிலோமீட்டரை அடைய செய்து கடைசியில் மார்க்ஸை நெருங்க பூமியை பார்க்காத நாட்கள் என்னும் எக்லிப்ஸ் வர பல நாட்கள் பல வாரங்கள் சிக்னல் இல்லாமல் இருட்டு அறையில் குண்டுஊசி தேடுவது போல பல நாட்கள் பொறுத்து இருந்து பின்பு சிக்னால் கிடைக்க ஒரு வழியாய் மார்க்ஸை தொடலாம் என நினைக்கும் போது சூரிய ஒளி இல்லாமல் எனர்ஜி மங்க இருக்கும் சொற்ப எரிபொருளில் கடைசி 5 . 3 செகண்டு கள் எஞ்சினை இயக்கி மார்ஸ் ஆர்பிட்டரில் சேர்ந்து படங்களை எடுத்து அனுப்பிய போது தான் உணர்ந்தார்கள் உலக விண்வெளி நிறுவனங்கள் இந்தியா…. நம்மை எல்லாம் தாண்டி எங்கோ ராக்கெட் வேகத்தில் பயணிக்கிறது என்று……… Hope to get the signal from VIKRAM like Mangalyan may be after few Days…. Weeks, Months…!.

பொறுமை காப்போம்…. பொரி உருண்டை போராளிகளின் கேலி பேச்சுக்களை புறக்கணிப்போம் …. ஜெய் ஹிந்த்