June 21, 2021

ஷூகர் பேஷண்டுகளுக்கான மருந்து, மாத்திரை விலை 10 % முதல் 35 % குறைஞ்சுடுச்சு!

உயிர்காக்கும் மருந்துகள் இந்தியாவில் அந்தந்த பகுதிகளில் தனித் தனி விலையில் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. அத்துடன் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைகள் சொல்லும் மருந்துக் கடைகளில்தான் நோயாளிகள் இன்றளவும் மருந்துகளை வாங்க வேண்டியுள்ளது. இதனால் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு விலை வைத்து விற்கப்படுகிறது. இதனைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து. இந்தியா முழுமைக்கும் ஒரே விலையில் உயிர் காக்கும் மருந்து பொருட்களை விற்க மருந்து கம்பெனிகள், விற்பனை டீலர்கள், விற்பனை சங்கத்தினர் ஆகியோருக்கு உரிய உத்தரவை மத்திய அரசு அவ்வப்போது வெளியிடுகிறது.

sugar jun 5

கடந்த ஆண்டு வரை மாறிய விலைகளில் விற்கப்படும் மருந்துகள் மூலம் இதுவரை 4,000 கோடி ரூபாய் வரை கூடுதலாக நுகர் வோரிடம் இருந்து வசூலிக்கப்பட்டிருப்பதாக தேசிய மருந்துகள் விலை ஆணையம் தெரிவித்துள்ளது.இதனால் இந்த விலைக் கட்டுப்பாடு கமிட்டி அடிக்கடி ஆலோசித்து உயிர்க் காக்கும் மருந்து களின் விலையை, அவ்வப்போது நிர்ணயித்து வருகிறது. இந்நிலை யில், நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்துகளின் விலையை என்பிபிஏ குறைத்துள்ளது. அதன்படி, 25 அத்தியாவசிய மருந்துகளின் சில்லறை விலை 10 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை குறையும். இந்த மருந்துகளில் பெரும்பாலானவை சர்க்கரை நோய்க்கானவை.

‘‘இந்த மருந்து விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது. தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் (என்எல்இஎம்) உயிர்க் காக்கும் மருந்துகள் இடம்பெற்றுள்ளன. அந்தப் பட்டியலில் உள்ள மருந்துகள், மக்கள் வாங்கும் அளவுக்கு வைத்திருக்க வேண்டியது அவசியம்’’ என்று என்பிபிஏ தலைவர் பூபேந்திர சிங் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஏற்கெனவே இந்த 25 மருந்துகள் விலை கட்டுப்பாட்டில்தான் உள் ளன. தற்போது மேலும் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.அத்துடன் மொத்த விலை அட்டவணையின் மாற்றங்களுக்கு ஏற்ப ஆண்டுதோறும் மருந்துகளின் விலையை மருந்து நிறுவனங்கள் மாற்றி வருகின்றன.