Running News

“பத்ம பூஷன் ” வாணி ஜெயராம் திடீர் மறைவு : தமிழ் சினிமா உலகிற்கும் , இசை உலகிற்கும் பெரும் இழப்பு.

பிரபல பாடகி வாணி ஜெயராம் இசை உலகில் இதுவரை 19 மொழிகளில் 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்; இந்நிலையில் அவரது இல்லத்தில் இன்று காலை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். வாணி ஜெயராம் அவர்கள் கடைசியாக சில படங்களில் பாடியிருந்தார் . அதில் இசையமைப்பாளர் D.இமான் இசையில் ‘மலை’ திரைப்படத்திற்கு பாடியது அவர் பாடிய இறுதி திரை இசைப்பாடலாகும்.

லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் யோகி பாபு , மற்றும் லஷ்மி மேனன் நடிப்பில் இந்த படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.

இந்த படத்தின் இசை விழாவை பெரும் விமரிசையாக நடத்தவும், “பத்ம பூஷன்”திருமதி.வாணி ஜெயராம் அவர்களை கவுரவிக்கும் விதமாகவும் தனிப்பெரும் பாராட்டு விழாவாகவும் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில் , அவரின் திடீர் மறைவு படக்குழுவினருக்கு
பெரும் சோகத்தையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இமான் இசையில் அவர் பாடிய பாடல் உள்ளத்தை வருடும் படி வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும், இந்த பாடலை அவருக்கு காணிக்கையாக்குவதாகவும் படக்குழுவினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

aanthai

Recent Posts

பத்து தல விமர்சனம்!

சினிமாக்கள் நம் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் பலமானது. அதனை உணர்ந்த கலைஞர்கள், உண்மைக் கதைகளையும், உண்மைச் சம்பவங்களையும் வைத்து…

8 hours ago

போப் பிரான்சிஸ் ரோம் மருத்துவமனையில் அனுமதி!

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், சுவாச தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

8 hours ago

பொன்னியின் செல்வன் – 2ம் பாகம்- இசை & ட்ரைலர் வெளியீட்டு விழாத் துளிகள்!

சுபாஸ்கரன் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் - 2ம் பாகம்…

9 hours ago

மூன்றாவது உலகப்போர் மூளும் : பிறகு?

இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் உலகில் நடந்த போர்களில் அதற்கு காரணம் யார் என்று பார்த்தால் கண்டிப்பாக அதன் பின்னால் அமெரிக்கா…

10 hours ago

தமிழக அரசுக்கு கிண்டி ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய ரூ. 730 கோடி வாடகை பாக்கி -மெட்ராஸ் ஐகோர்ட் அதிரடியாக உத்தரவு.

1777ம் ஆண்டு குதிரையேற்ற பயிற்சிக்காக துவங்கப்பட்ட சென்னை ரேஸ் கிளப்புக்கு 1946 ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கிண்டியில் 160…

1 day ago

யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் இல்லை – பேடிஎம் விளக்கம்!.

யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியான நிலையில் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள்…

1 day ago

This website uses cookies.