ஜஸ்ட் 36 சதவீத இந்தியர்கள் மட்டுமே ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் எடுத்திருக்காங்கோ!~

ஜஸ்ட் 36 சதவீத இந்தியர்கள் மட்டுமே ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் எடுத்திருக்காங்கோ!~

பண்டைய இந்தியர்களின் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் தான் அவர்கள் நீண்ட நாள் வாழ்வதற்கு உதவியாக இருந்தது. அக்காலத்தில் கிராமப் பகுதியில் மருத்துவ வசதிகள் அவ்வளவாக இல்லை. இருப்பினும் பண்டைய இந்தியர்கள் 100 வருடங்கள் வாழ்ந்தனர். ஆனால் இன்றோ 60 வயது வரை வாழ்வதே அரிதாக உள்ளது. அப்படியே 60 வயதை எட்டியவர்களும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுடன் தான் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு முதன்மையான காரணம் அயல்நாட்டு உணவுகளின் மீதுள்ள மோகத்தால், நம் இந்திய பாரம்பரிய உணவுகளை மறந்து தவிர்ப்பது தான். மேலும் அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்து, உடலுக்கு கடுமையான வேலையைக் கொடுத்து உணவை உட்கொண்டு வந்தனர். அதிலும் தானிய உணவுகளைத் தான் அதிகம் உட்கொண்டு வந்தனர். அதனால் அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்களால் செரிமானம் சீராக நடைபெற்று, உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டது. மேலும் நம் முன்னோர்கள் சுவைக்காக உணவை உட்கொள்ளாமல், உடல் ஆரோக்கியத்தின் தேவைக்காக உணவை உட்கொண்டு வந்தனர். அக்காலத்தில் விவசாயம் முதன்மையான தொழிலாக இருந்தது. இதனால் உண்ணும் உணவுகள் அக்காலத்தில் தரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருந்தது. மேலும் விளையும் அனைத்து பயிர்களும், இயற்கை உரம் பயன்படுத்தி வளர்க்கப்பட்டதால், உண்ணும் காய்கறி மற்றும் பழங்களில் சத்துக்களானது ஏராளமாக இருந்தது. முக்கியமாக அக்காலத்தில் மரங்கள் அதிகம் இருந்ததால், சுவாசிக்கும் காற்றும் சுத்தமாக இருந்தது.

பண்டைய இந்தியர்கள் இறைச்சிகளை அளவாகத் தான் உட்கொண்டு வந்தனர். மேலும் அக்காலத்தில் இருந்த ஆடு மற்றும் கோழிக்கு சரியான உணவை வழங்கி வளர்த்து, அவற்றை உட்கொண்டதால், அவர்கள் நன்கு வலிமையான உடலைப் பெற்றிருந்தனர். பண்டைய இந்தியர்கள் தங்களது அன்றாட உணவில் தவறாமல் தயிரை சேர்த்து வந்தனர். இதனால் தயிரில் உள்ள நுண்ணுயிரிகளால், அவர்களது குடல் ஆரோக்கியம் மேம்பட்டு இருந்தது. பண்டைய காலத்தில் விவசாயம் முதன்மைத் தொழிலாக இருந்ததால், நம் தாத்தா, பாட்டி இருவரும் விவசாயம் செய்யும் நிலத்தில் பெரும்பாலான நேரத்தை செலவிட்டனர். மேலும் விவசாயம் செய்யும் போது சூரியனிடமிருந்து போதிய வைட்டமின் டி சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியத்திறகு தேவையான வைட்டமின் டி சத்து கிடைத்தது.

முக்கியமாக எங்கும் நடந்தே செல்வதால், பல நோய்களுக்குக் காரணமான கொழுப்புக்களின் தேக்கத்திற்கு வழி இல்லாமலே இருந்தது. குறிப்பாக பண்டைய காலத்தில் மன அழுத்தம் என்ற ஒன்றே இருந்ததில்லை. தற்போது தான் அதிகப்படியான வேலைப்பளுவின் காரணமாக அது இல்லாதவர்களைக் காண்பது என்பது அரிதாக உள்ளது. அதே சமயம் நம் நாட்டில் உள்ள மக்களில் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் 36 சதவீத இந்தியர்கள் மட்டுமே சேர்ந்துள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிப்பதுதான் உச்சப்பட்ச கவலைக்குரிய செய்தியாகும்!.

இந்த ஆய்வை குரோம் டேட்டா அனலிட்டிக்ஸ் அன்ட் மீடியா (சிடிஏஎம்) என்ற தனியார் நிறுவனம் நடத்தியது. இதில் 4 ஆயிரம் இந்தியர்களிடம் காப்பீடு தொடர்பாக நேர்காணல் செய்து ஆய்வு நடத்தியுள்ளது. நம் நாட்டிலுள்ள டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, புனே மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்பட்ட இந்த நேர்காணலில் 51 சதவீத பெண்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நேர்காணலில் பங்கேற்றவர்களில் 37 சதவீதம் பேர் வாகனக் காப்பீடு திட்டம், 41 சதவீதம் பேர் ஆயுள் காப்பீடு திட்டம், 36 சதவீதம் பேர் மருத்துவக் காப்பீடு திட்டம் ஆகியவற்றில் சேர்ந்துள்ளதாகத் தெரிவித்தனர். இதில் 87 சதவீதம் பேர் வரி சேமிப்புக்காகவே மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர்ந்ததாக தெரிவித்தனர்.

மருத்துவக் காப்பீடு திட்டத்தில் மட்டும் தனியாகச் சேர்ந்திருப்பவர்கள் வெறும் 31 சதவீதம் பேர்தான். மற்றவர்கள் தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தின் மூலம் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிலும் பெரும்பாலானவர்கள் 2 லட்சம் வரையில் மட்டும் காப்பீடு பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்த இந்தக் காப்பீடு திட்டம், இதய மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட மிக முக்கியமான அறுவை சிகிச்சைகளுக்குப் பொருந்தாது.

இந்தியாவில் மருத்துவச் செலவுக்காகச் சொந்த பணத்தைப் அதிகமாகச் செலவிடுகிறார்கள். 2014ஆம் ஆண்டில் மட்டும் மருத்துவத்துக்காகச் செலவிடப்பட்ட மொத்த தொகையில் 89 சதவீதம் நோயாளிகளின் சொந்தப் பணம். ஆனால் இவ்விஷயத்தில் சர்வதேச சராசரி 18 சதவீதம்தான் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

Related Posts

error: Content is protected !!